கம்பராமாயணம் 5026 · சுந்தர 3.144

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புகழோன் - புகழ்மிக்க அனுமன்; அக்கன் மாளிகை கடந்து - அட்சய குமாரன் மாளிகைகளைக் கடந்து; மேல் போய் - அப்பாற் சென்று; தொக்க - நெருங்கியுள்ள; அதிகாயன் கோயிலும் - அதிகாயனின் அரண்மனையும்; தம்பியர் இல்லமும் - அவனுக்கு இளையவர்களின் வீட்டையும்; துருவி - ஊடுருவிப் பார்த்து; தக்க - தகுதியுடைய; மந்திரத் தலைவர் - தலைமை அமைச்சர்களின்; மாமனைகளும் - பெரிய வீடுகளையும்; தடவி - துழவி; புக்கு - புகுந்து; இராகவன் சரமென - இராமபிரானின் அம்பைப் போல; நீங்கினன் - சென்றான்.

கடந்துசெல்லுதலும், துருவிச் செல்லுதலும், தடவிச் செல்லுதலும் இராகவனின் அம்பின் இயல்பு. ‘மராமரத்தூடு செல் அம்பு” என்றும் (கம்ப. 4280) “மலைஉருவி, மரம் உருவி, மண்ணுருவிற்று ஒருவாளி”, என்றும் (கம்ப. 662) ‘உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி’ (கம்ப 9940) என்றும் பேசப்படுபவை உலகம் அறியும். மாருதி இராமபிரானின் அம்புக்கிணையாகப் பேசப்படுவதைப் போலவே அங்கதன் ‘வீரன் வெஞ்சிலையிற் கோத்த அம்பென விரைவிற் போனான்’, (கம்ப. 6986) என்று பேசப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Passing Akkaṉ's mansion and going on, he probed through Atikāyaṉ's
  2. crowded palace and the homes of his younger brothers,
  3. felt his way through the great houses of the worthy chief ministers,
  4. entered and left them, the famed one, like Irākavaṉ's arrow.

What the poem says

Aṉumaṉ searches the palaces of Irāvaṇaṉ's other sons, Akkaṉ (Akṣa) and Atikāyaṉ, the houses of their younger brothers, and the mansions of the chief ministers.

He passes through them like one of Irāmaṉ's arrows, which go straight through, pierce and feel their way inside whatever they strike. Elsewhere the poem describes Irāmaṉ's arrow going through seven trees, and through mountain, tree and earth. Aṅkataṉ too is later compared to an arrow shot from the hero's bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akkaṉ māḷikai kaṭantupōy, mēl atikāyaṉ
tokka kōyilum, tampiyar illamum, turuvit
takka mantirat talaivarmā maṉaikaḷum taṭavip
pukku nīṅkiṉaṉ, irākavaṉ caram eṉap pukaḻōṉ.