கம்பராமாயணம் 5028 · சுந்தர 3.146

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒரு துணையிலான் - ஒரு துணையையும் வேண்டாத வீரன்; தனி - ஒப்பற்ற; கட - மதம்பிடித்த; களிறு என - யானை போல; தாய - கடக்கப் பெற்ற; பெரும் - பெரிய; பனி - குளிர்ந்த; கடல் கடவுள்தன் - கடலின் தெய்வத்தின்; பரிபவம் - அவமானத்தை; துடைப்பான் - துடைக்கும்பொருட்டு; ஏழ்கடல் கிடந்தது - ஏழு கடல் தடையாகக் கிடக்கிறது; இனி - இப்போது; கடப்ப அரிது என்று இசைத்தான் - தாண்டிச் செல்வது கடினம் என்று இசைத்து; கனிக்கு - உண்ணும் கனியின் பொருட்டாக; அடல் கதிர் - வலிமைமிக்க சூரியனை; தொடர்ந்தவன் - பின்பற்றிச் சென்ற அனுமன்; அகழியைக் கண்டான் - (இராவணனின் அரண்மனை) அகழியைப் பார்த்தான்.

கடல், அனுமன் கடந்ததால் உண்டான கடல் தெய்வத்தின் அவமானத்தைத் துடைக்க எண்ணுகிறது. அனுமன் ஒரு கடலைக் கடந்ததனாலே, அந்த கடலின் இறைவன் தன்பழி ஒழிக்க, ஏழு கடலும் கூட்டி வந்து கிடந்தது போன்ற அகழியைக் கனிக்காக ஆதித்தனைத் தொடர்ந்தவன் கண்டான் என்பது பழைய உரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who, like a peerless rutting elephant, needs no companion, said:
  2. 'To wipe away the shame of the great god of the cold sea he leapt across,
  3. the seven seas lie here; now it is hard to cross!'
  4. So he who chased the mighty sun for a fruit beheld the moat.

What the poem says

Aṉumaṉ, who as a child leapt after the sun thinking it was a fruit, now sees the vast moat around Irāvaṇaṉ's palace.

With playful exaggeration he imagines that the god of the ocean, shamed because Aṉumaṉ has just jumped over his sea, has gathered all seven seas here to block his way. Now, Aṉumaṉ jokes, it will really be hard to cross.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉik kaṭak kaḷiṟu eṉa oru tuṇaiyilāṉ, 'tāya
paṉik kaṭal peruṅ kaṭavuḷtaṉ paripavam tuṭaippāṉ,
iṉik kaṭappa aritu! ēḻ kaṭal kiṭantatu! 'eṉṟu icaittāṉ
kaṉikku aṭal katir toṭarntavaṉ akaḻiyaik kaṇṭāṉ.