கம்பராமாயணம் 503 · பால 9.37

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அ மொழி கிளத்த,
வாட்டம் மீ கொளச் சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெம் கனல் பொழிதர நால் நிலம் தடவித்,
தோட்டு நுங்கினர் புவியினைப் பாதலம் தோன்ற.

பொருள் · Meaning in Tamil

வடவை - பெண்குதிரை (நெருப்பு) - இடவாகு பெயர் கடலிடையே வாழும் ஒரு பெண் குதிரையின் முகத்திலே நெருப்பு எப்பொழுதும் அவியாமல் உள்ளது என்றும், பிரளய காலத்தில் அது வெளிப்பட்டு உலகை எரித்து அழிக்கு மென்றும் கூறுவர்.

வேள்விக் குதிரை காணாதுபோன செய்தியைச் சகரன் தன் மக்களிடம் கூறல் - அவர்கள் மிக்க கோபத்தோடு சென்று எங்கும் தேடுதல் - காணாமையால் பூமியைத் தோண்டுதல் - என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king heard it and told the news to his sons;
  2. overcome with dismay, the sons of Cakaraṉ, wild as the mare-fire,
  3. their eyes raining hot flame, ransacked the four kinds of land,
  4. and dug and devoured the earth until the underworld came into view.

What the poem says

Cakaraṉ tells his sixty thousand sons that the horse is lost. They search everywhere in a rage and, when they cannot find it, start digging into the earth until they reach the underworld. Their fury is compared to vaṭavai, the fire said to burn forever in the mouth of a mare under the ocean, which will break out and burn the world at the end of time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēṭṭa vēntaṉum, matalaiyarkku am moḻi kiḷatta,
vāṭṭam mīkkoḷac cakararkaḷ vaṭavaiyiṉ maṟuki,
nāṭṭam veṅ kaṉal poḻitara nāṉilam turuvi,
tōṭṭu nuṅkiṉar puviyiṉaip pātalam tōṉṟa.