கம்பராமாயணம் 504 · பால 9.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர் என்பரால் : வடகுண திசையின்,
ஏறும் மாதவக் கபிலன்பின் இவுளி கண்டு எரியின்
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் சினத்தார்.
பொருள் · Meaning in Tamil
யோசனை - பேரளவு - சமணநூல் வழக்கு; குணக்கு - கிழக்கு.
சகர குமாரர் வடகிழக்குத் திசையிலே நூறு யோசனை அகலமும் ஆழமும் அமையத் தோண்டினர்; கபிலன் பின் இருந்த குதிரையைப் பார்த்தனர்; கோபத்தால் அம் முனிவனை ஏசினர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A hundred yojanas wide and as deep, so that it shook,
- they cleft the earth, it is said; and in the north-east quarter,
- behind Kapilaṉ of towering penance they saw the horse, and, like fire
- they flared and reviled him; in their arrogance they pressed upon him and raged.
What the poem says
The princes dig a pit a hundred yojanas wide and deep in the north-east. There they find the horse tied behind the sage Kapilaṉ. Taking him for the thief, they abuse and threaten him in their arrogance, which will be their undoing.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟu yōcaṉai akalamum āḻamum nuṭaṅkak
kūṟu ceytaṉar eṉparāl: vaṭa kuṇaticaiyiṉ,
ēṟu mā tavak kapilaṉpiṉ ivuḷi kaṇṭu eriyiṉ
cīṟi vaitaṉar cerukkiṉar nerukkiṉar ceṟuttār.