கம்பராமாயணம் 5030 · சுந்தர 3.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாயகன் - இறைவனான இராமபிரானின்; புகழ் நடந்த - புகழ் பரவிய; பேர் - பெரிய; உலகெலாம் - எல்லா உலகங்களிலும்; நடந்தான் - பரவிய அனுமன்; ஆயது ஆகிய - மேலே கூறப்பெற்ற தன்மையுடையதாகிய; அகன் புனல் அகழியை அடைந்தான் - அகன்ற நீரை உடைய அகழியைச் சார்ந்து; தாய வேலையின் - முன்பு கடந்த கடலைப் போல; இருமடி - இரண்டு மடங்கு; விசைகொடு - வேகத்தை மேற்கொண்டு; தாவி - கடந்து; போய காலத்தும் - போன போதிலும்; போக்கு அரிது - (இவ் அகழியைக்) கடப்பது கடினம்; என்பது - என்னும் மனக் கருத்தை; புகன்றான் - வெளிப்படையாகப் பேசினான்.
கடலைத் தாண்டியதுபோல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும் கடக்க முடியாது என அனுமன் பேசினான். இராகவன் புகழ் பேசப்படும் இடங்களில் எல்லாம் பேசப்படும் புகழாளன் அனுமன். நடத்தல் - பரவுதல். மறவர் குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று (புறவெ - மாலை - வெட்சி - 8 கொ)
ஆங்கிலம் · English translationAI
Translation
- He reached that moat of broad waters, such as has been told,
- and said aloud, 'Even if I leapt with twice the force with which
- I crossed the sea, it would be hard to get across!' So spoke
- he who had spread through all the great worlds where his Lord's fame had spread.
What the poem says
Standing at the edge of the great moat, Aṉumaṉ says aloud that even a leap twice as strong as the one that carried him over the ocean might not get him across.
Aṉumaṉ is described as one whose own fame has travelled everywhere that Irāmaṉ's fame has travelled. Wherever Irāmaṉ's story is told, Aṉumaṉ is praised too. His wonder at the moat stresses how strongly Irāvaṇaṉ's palace is defended.