கம்பராமாயணம் 5031 · சுந்தர 3.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேக்கு - மேலே உள்ள; நால்வகை மேகமும் - நான்கு வகையான மேகங்களும்; கீழ்விழ - (நீர்வேட்கையால்) கீழே விழுந்து விட; தூக்கினால் அன்ன - அம்மேகத்தைத் தூக்கி வைத்தாற் போன்ற; தோயத்தது ஆய் - தண்ணீரை உடையதாய்; துயர் ஆக்கினான் - உலகிற்குத் துன்பம் விளைவித்த இராவணனின்; படை அன்ன - சேனை போன்ற (கடக்க முடியாத); அகழியை - அகழியின் அமைப்பை; வாக்கினால் - வார்த்தைகளால்; உரை வைக்கலும் - விரித்துக் கூறவும்; ஆகுமோ - இயலுமா.
இது அனுமனின் எண்ணம் - படை எங்ஙனம் கடக்கவொண்ணாதோ அதுபோல் அகழியும் கடக்க ஒண்ணாதது. அழச் செய்பவன் - என்னும் பொருள்தரும் சொல் இராவணன். கம்பர் அழுகைக்கு மூலகாரணமாகிய துயரத்தைத் தருபவன் என்றார். அளவடிநான்குடைக் கட்டளைக்கலிப்பா. மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று வரும். பாடலின் முதற்சீர் நேரசையாயின் பதினோரெழுத்தும், நிரையசையாயின் பன்னீரெழுத்தும் கொண்டு அமையும். இந்நூலில் இவ்விருத்தங்களின் தொகை 1198. (மணிமலர் 76)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if the four kinds of clouds on high had fallen down
- and been lifted and set here, it holds such water;
- this moat, like the army of him who made sorrow for the world,
- could it ever be set down in words?
What the poem says
The poem changes to a shorter metre as it describes the moat. Its water is so deep that it seems as if all four kinds of rain clouds fell from the sky and were heaped up in it.
Like Irāvaṇaṉ's army, it cannot be crossed, and no words could describe it. Irāvaṇaṉ is called the one who made sorrow, playing on the meaning of his name, 'he who makes others weep'.