கம்பராமாயணம் 5034 · சுந்தர 3.152

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடின
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலம் பிடிக்கும் ஒர் ஊடல் கொடுக்குமால்!

பொருள் · Meaning in Tamil

(அவ்வகழி) நலத்த மாதர் - அழகிய பெண்கள்; நறை அகில் - கூந்தலுக்கு ஊட்டிய அகிற்புகையும்; நாவியும் - (அவர்கள்) மேனியின் கஸ்தூரியும்; அலத்தகக் குழம்பும் - (அவர்கள்) பாதத்திற் பூசிய செம்பஞ்சுக் குழம்பும்; செறிந்து - அகழி நீரிற் கரைந்து; ஆடிய - நீராடிய; இலக்கணக் களிறோடு - உத்தம இலக்கணம் அமைந்த ஆண்யானைகட்கும்; இள - இளமையும்; மெல்நடை - மென்மையும் (அமைந்த); குலப்பிடிக்கும் - உயர்குலத்துப் பெண் யானைகட்கும்; ஓர் - ஒப்பற்ற; ஊடல் கொடுக்கும் - ஊடலை வழங்கும்.

மகளிரால் நிறம் வேறுபட்ட புனல் மூழ்கிய பறவை ஊடல் கொள்வதை, ‘குதலையர் குடைந்த தண்புனல்வாய், குங்குமச் சுவடுற, ஊடிப் பூவுறங்கினும் புள் உறங்காதன பொய்கை” என்று கூறியது (கம்ப. 460) காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fragrant agil smoke and musk of lovely women
  2. and the red lac paste of their feet, dissolved thick in its water,
  3. make the well-formed bull elephants that bathe in it, and the young,
  4. soft-stepping cow elephants of noble breed, fall out in a lovers' quarrel!

What the poem says

Women's perfumes, musk and the red paste they put on their feet have soaked into the moat water. When the fine bull elephants bathe in it they come out smelling of women's scents, and their mates grow jealous and sulk.

This lovers' quarrel, ūṭal, is a favourite theme of Tamil love poetry. Here it is playfully given to elephants. An earlier verse of the epic uses the same idea for birds stained with saffron from women's bathing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nalatta mātar naṟai akil nāviyum
alattakak kuḻampum ceṟintu āṭiya
ilakkaṇak kaḷiṟōṭu iḷa mel naṭaik
kulap piṭikkum or ūṭal koṭukkumāl!