கம்பராமாயணம் 5035 · சுந்தர 3.153

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நறவு நாறிய - தேன்மணம் வீசுகின்ற; நாள் நறுந் தாமரை - நறுமணம் வீசும் புதிய தாமரைகள்; துறைகள் தோறும் - அவ்வகழியின் எல்லாத் துறைகளிலும்; முகிழ்த்தன தோன்றும் - குவிந்து தோன்றும்; சிறை எய்திய - சிறையை அடைந்த; செல்வி முகத்தினோடு - பிராட்டியின் முகத்துடன்; உறவு உடையார்தாம் - உறவைப்பெற்றவர்கள்; ஒடுங்கார்களோ - ஒடுங்காமல் இருப்பார்களோ? சீதை சிறைபுக்கதால் அவள் முகம் போன்ற தாமரைகள் குவிந்து கிடந்தன - தற்குறிப்பேற்றம். சிறையின் எய்திய செல்வி - என்பதில் உள்ள ‘இன்’ அசை. சிலம்பின் வன்வார்ச் சிறுபறைகரங்க என்னும் சிந்தாமணிப் பாடலுக்கு (கோவிந்தை - 50) உரை வழங்கிய இனியர் ‘இன்’ அசை என்றார். சிறை எய்திய செல்வி என்க. தாம் - உரையசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The fresh, fragrant lotuses smelling of honey
  2. appear closed up at every bathing place!
  3. Those who are kin to the face of the lady who has come into captivity,
  4. would they not shrink into themselves?

What the poem says

The lotuses on the moat are all closed. The poet gives this an imagined reason, a figure Tamil poetics calls taṟkuṟippēṟṟam.

Cītai's face has always been compared to a lotus, so the lotuses are her relatives. Now that she is a prisoner in Ilaṅkai, how could her kin bloom happily? They shrink into themselves in grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṟavu nāṟiya nāḷ naṟum tāmarai
tuṟaikaḷ tōṟum mukiḻttaṉa tōṉṟumāl!
ciṟaiyiṉ eytiya celvi mukattiṉōṭu
uṟavu tām uṭaiyār oṭuṅkārkaḷō?