கம்பராமாயணம் 5036 · சுந்தர 3.154
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பளிங்கு - பளிங்குக்கற்களை; செற்றி - ஒழுங்குபடுத்தி; குயிற்றிய - பதிக்கப்பெற்ற; ஒளிபாய் - ஒளிபரவிய; விளிம்பும் - படிகளின் முகப்பும்; வெள்ளமும் - அதனை அடுத்த வெள்ளமும்; மேல் - மேலாக உள்ள தோற்றத்தில்; மெய் தெரியாது - உண்மையியல்பு அறியப்படாது; தெளிந்த சிந்தையரும் - தெளிவு பெற்ற உள்ளத்தினரும்; சிறியார்களோடு - அற்பர்களோடு; அளிந்தபோது - கலந்தபோதில்; அறிதற்கு - வேறுபடுத்தி அறிவதற்கு; எளிது ஆவரோ - சுலபமாக இருப்பார்களோ.
பளிங்காற் செய்யப்பெற்ற படியின் விளிம்பும் அகழியில் தண்ணீரும் மேலாக உள்ள தோற்றத்தால் வேற்றுமை தெரியாது. அற்பர்களுடன் கலந்தால் தெளிந்த அறிஞர்களை வேறுபடுத்திக் காண்பது கடினம். பளிங்கு அறிஞர்கள். அகழிநீர் - அறிவற்றவர்கள். இது வேற்றுப்பொருள் வைப்பணி என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bright edge, set with crystal laid in order, and the water:
- on the surface their true natures cannot be told apart.
- Even those of clear mind, when they mingle
- with petty men, are they easy to tell apart?
What the poem says
The steps of the moat are edged with clear crystal, so from above one cannot tell where the crystal ends and the clear water begins.
The poet draws a general truth from this, using a figure in which a separate maxim supports the description. When wise people of clear mind mix with petty people, it becomes just as hard to tell them apart. The crystal stands for the wise and the water for the foolish.