கம்பராமாயணம் 5037 · சுந்தர 3.155
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவ்வகழி) நீலமே முதல் - நீலம் முதலாக உள்ள; நல்மணி - நல்ல ரத்தினங்களும்; நித்திலம் - முத்துக்களும்; மேல - மேற்பகுதியிலும்; கீழ - அடிப் பகுதியிலும்; பல்வேறு ஒளி - மாறுபட்ட ஒளிகளை; வீசலால் - பரப்புதலாலே; பாலின் வேலை முதல் - பாற்கடல் முதலான; பலவேலையும் - பல கடல்களும்; கால் - வாய்க்காலாக; கலந்தனவோ என - ஒன்று சேர்ந்து விட்டனவோ என்று; காட்டும் - நினைக்கச் செய்யும்.
நீலம் முதலானவற்றால் பல்வேறு நிறம்பெற்ற அகழி, பாற்கடல் முதலானவை ஒன்று சேர்ந்து விட்டனவோ என்று நினைக்கச் செய்யும். காட்டுதல் - நினைப்பித்தல். ‘மூரல் முறுவற்குறிகாட்டி முத்தே உயிரை முடிப்பாயோ’ (கம்ப. 6066) நவமணிகளால் வேறுவேறு நிறம் பெற்ற அகழிகளுக்குப் பல்வேறு நிறம் பெற்ற கடல்கள் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since sapphires first and other fine gems, and pearls,
- above and below, shed many different lights,
- it makes one think that the sea of milk and many other seas
- have flowed together here through channels!
What the poem says
Sapphires, other gems and pearls set above and below the water give off light of many colours, so the moat shines in different hues.
It looks as if the legendary seas of Indian cosmology, the sea of milk and the others, each with its own colour, have run together through channels into this one moat.