கம்பராமாயணம் 5038 · சுந்தர 3.156

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பின்பட
துன்னரும் கடி மாநகர் துன்னினான்
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) அன்ன - அப்படிப்பட்ட; வேலை அகழியை - அலையுடன் கூடிய அகழியை; ஆர்கலி என்ன - முன்பு தாண்டிய கடலைப் போல; கடந்து - தாவிச் சென்று; இஞ்சியும் பிற்பட - மதில் பிற்பட்டிருப்ப; துன்ன அரும் - ஒருவரும் நெருங்கவியலாத; கடி மாநகர் - காவலையுடைய இடை நகரத்தை; துன்னினான் - அடைந்தான்; பின்னர் - அதன்பிறகு; எய்திய தன்மை - நிகழ்ந்த செய்தியை; பேசுவாம் - கூறுவோம்.

அனுமன் அகழியைக் கடலைப் போலத் தாண்டி மதில் பிற்பட இடைநகரை அடைந்தான். பின்பு நிகழ்ந்தவற்றைக் கூறுவோம். வேலை அகழி - என்பதற்குக் கடல்போன்ற அகழி என்று கூறப்பெற்றது. கடல் போன்ற அகழியைக் கடல்போலத் தாவினான் என உரை கூறுவதில் சிறப்பில்லை. ஆதலின் வேலை என்பதற்கு ‘அலை’ என்று பொருள் கூறப்பெற்றது. “வேலைப் புணரியம்பள்ளியம்மான்” (திருவிருத்தம் 75) அன்றி “வேலி” என்றும் பொருள் கூறலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crossing that moat of waves as he had crossed the roaring sea,
  2. and leaving the wall behind him as well,
  3. he came into the great guarded city that none can approach;
  4. what befell him after, we shall now tell.

What the poem says

Aṉumaṉ leaps over the moat as easily as he leapt the ocean, passes the wall, and enters the inner, closely guarded city around Irāvaṇaṉ's palace.

The poet speaks in his own voice here, promising to tell what happened next, like a storyteller turning to a new episode. The commentary reads the word for the moat as 'moat of waves', to avoid the flat reading 'he crossed the sea-like moat like the sea'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa vēlai akaḻiyai ārkali
eṉṉavē kaṭantu iñciyum piṟpaṭa
tuṉṉa aruṅ kaṭi mānakar tuṉṉiṉāṉ
piṉṉar eytiya taṉmaiyum pēcuvām.