கம்பராமாயணம் 5039 · சுந்தர 3.157

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கருவி நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரண்டு ஓசனைத்
தெரிவு மும்மை நூறாயிரம் தேடினான்!

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) காலனும் - யமனும்கூட; வெருவி ஓடும் - அச்சமுற்று ஓடும்படியான; அரக்கர்தம் வெம்பதி - அரக்கர்களின் கொடிய நகருள்; கரிய நாழிகை பாதியில் - இருண்ட நடுயாமத்தில்; ஒரு பன்னிரு யோசனை - பன்னிரண்டு யோசனை தூரமுள்ள; மும்மை நூறாயிரம் தெருவும் - மூன்று லட்சம் தெருக்களையும்; ஒருவனே - தான் ஒருவனாகவே; தேடினான் - (பிராட்டியைத்) தேடிச் சென்றான்.

அனுமன், யமனும் பயப்படும் அரக்கர் நகருள் நடுயாமத்தில் பன்னிரண்டு யோசனை தூரமுள்ள மூன்று லட்சம் தெருக்களையும் தனியாகத் தேடினான். இருண்ட இரவு - “கரிய நாழிகை” என்று பேசப்பட்டது. “கரியநாழிகை ஊழியின் பெரியன”, என்பது பெரிய திருமொழி (திவ்ய பெரிய திருமொழி 8-5-6)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In half a dark watch of the night, in the cruel city of the demons
  2. from which even Death would run in terror,
  3. all alone he searched, through twelve yojanas,
  4. three hundred thousand streets!

What the poem says

In the space of half a dark night-watch Aṉumaṉ, entirely alone, searches all three hundred thousand streets of the inner city, which stretches twelve yojanas. This is the demon city that even Yama, god of death, would flee from in fear.

The verse stresses both the size of the task and Aṉumaṉ's speed and courage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kariya nāḻikai pātiyil kālaṉum
veruvi ōṭum arakkartam vempati
oruvaṉē oru paṉṉiru yōcaṉait
teruvu mummai nūṟāyiram tēṭiṉāṉ!