கம்பராமாயணம் 5040 · சுந்தர 3.158

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கினது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியம் அடங்கின தொடங்கினது உறக்கம்!

பொருள் · Meaning in Tamil

(இலங்கையில்) வேரியும் அடங்கின - மது உண்போர் முழக்கம் ஒடுங்கின; நெடுங்கடல் விளம்பும் - கடலைப் போல் முழங்கும்; பாரியும் அடங்கின - பாரி வாத்தியங்களும் ஒடுங்கின; பாடல் அடங்கியது - பாடல்களும் ஒடுங்கிவிட்டது; கம்மியர்கள் - பொற்கொல்லர்கள்; காரியம் அடங்கினர் - தொழில் முடித்து ஒடுங்கி விட்டனர்; மும்மைத் தூரியம் - மூவகையான முரசங்கள்; அடங்கின - ஒடுங்கி விட்டன; உறக்கம் தொடங்கியது - தூக்கம் தொடங்கிவிட்டது.

வேரி - கள். இங்கு கள் குடிப்பவரின் முழக்கத்தைக் குறித்தது. பாரி - இராக் காவலரின் வாத்தியம். மும்மைத் தூரியம் - என்றது தியாக முரசு, வீரமுரசு, மணமுரசு என்னும் மூவகை முரசுகளை. மும்மை என்றது எண்ணப்படு பொருளாகாது மூன்று என்னும் எண்ணைக் குறித்தது. (திருக்குறள் நுண்பொருள் மாலை 23)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noise of the drinkers died down; the watch drums that roar like the wide sea
  2. fell silent; the singing ceased;
  3. the craftsmen put down their work; the three kinds of
  4. drums went still; sleep began!

What the poem says

The poem changes metre to describe Ilaṅkai falling asleep as Aṉumaṉ searches. One by one the sounds of the city die away: the shouting of drinkers, the night watchmen's drums, the songs, the goldsmiths' work.

The three kinds of drums are those beaten for gifts, for war and for weddings. The short, matching phrases, each ending in 'fell silent', copy the city slowly going quiet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēriyum aṭaṅkiṉa neṭuṅ kaṭal viḷampum
pāriyum aṭaṅkiṉa aṭaṅkiyatu pāṭal
kāriyam aṭaṅkiṉarkaḷ kammiyarkaḷ mummait
tūriyam aṭaṅkiṉa toṭaṅkiyatu uṟakkam!