கம்பராமாயணம் 5041 · சுந்தர 3.159

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினவர் அல்லார்.

பொருள் · Meaning in Tamil

நிறம் கொள் பரி - பலநிறங்களைக் கொண்ட குதிரைகள்; இறங்கின - தலை சாய்த்து உறங்கின; மறம்கொள் - வீரத்தைப் பெற்ற; எயில் காவலர் - மதிலைப் பாதுகாப்பவர்களின்; துடிக்கண் - வாச்சியங்களின் கண்கள்; ஏமம் உற எங்கும் - பாதுகாப்பு உண்டாக எல்லா இடங்களிலும்; கறங்கின - ஒலித்தன; பிறங்கு இணர் - விளங்குகின்ற பூங்கொத்துகளை உடைய; நறுங்குழலர் - மணம்மிக்க கூந்தலையுடைய மகளிரும்; பிணங்கி - மாறுபாடு கொண்டு; எதிர் - கணவனின் பணிமொழிக்கு எதிராக; ஊடினவர் - ஊடல் கொண்டவர்; அல்லார் - அல்லாத மற்றைய மகளிரும்; உறங்கினர் - தூங்கினார்கள்.

பரிகள் உறங்கின. யாமக் காவலரின் வாத்தியங்கள் ஒலித்தன. மகளிர் உறங்கினர். பிறங்கின நறுங்குழலர் என்றது மணமாகாத கன்னிப் பெண்களை - மணமகளிர் கூந்தல் பிறங்காமை அறிக. தாரும் மாலையும் மயங்குங்கால் கூந்தல் பிறங்குங்கொல். கிழவோன் பணிவுக்கெதிரில் பிணங்குதல் எதிர் ஊடுதல் என்று பேசப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bright-coloured horses lowered their heads; so that there be safety everywhere
  2. the drums of the valiant guards of the wall kept sounding;
  3. the women with fragrant hair bright with clusters of flowers, apart from their lovers,
  4. slept, all but those who had quarrelled and were sulking against their men.

What the poem says

The city sleeps. The horses droop their heads, and only the drums of the wall guards keep sounding through the night to keep the city safe.

The women sleep too, except those caught in a lovers' quarrel who lie awake sulking, refusing their husbands' pleas. The commentary takes the women whose hair is still bright with flower clusters to be unmarried girls, since a married woman's garland gets crushed in love-making.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟaṅkiṉa niṟam koḷ pari ēmam uṟa eṅkum
kaṟaṅkiṉa maṟam koḷ eyil kāvalar tuṭikkaṇ
piṟaṅku iṇar naṟuṅ kuḻalar aṉpar piriyātōr
uṟaṅkiṉar piṇaṅki etir ūṭiṉavar allār.