கம்பராமாயணம் 5044 · சுந்தர 3.162

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண் இமை அடைத்த பல கண் பொருநர் பாடல்
விண் இமை அடைத்தன விளைந்தது இருள் வீணை
தண்ணுமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்.

பொருள் · Meaning in Tamil

கள் - கள்ளை அருந்தும்; பல பொருநர் - பலவிதமான கூத்தர்களின்; பாடல் - பாடல்கள்; பண் இமை - பண்களாகிய இமைகளை; அடைத்த - மூடியபடி உறங்கின; வீணை - வீணைகள்; தண் - குளிர்ந்த; இமை - இமைகளை; அடைத்தன - மூடியபடி உறங்கின; தழங்கு இசை வழங்கும் - முழங்குகின்ற ஓசையைக் கொடுக்கும்; கண் - முரசம் முதலான கருவிகளின் கண்கள்; அடைத்தன - மூடியபடி உறங்கின; கண் - மக்களின் கண்கள்; இமை - இமைகளை; அடைத்தன - மூடியபடி உறங்கின; கபாடம் - கதவுகள்; அடைத்தன - மூடப்பெற்றன; விண் - ஆகாயமானது; இமை - (ஒளியாகிய) இமைகளை; அடைத்தென - மூடியபடி உறங்கியது போல; இருள் விளைந்தது - எங்கும் இருள் பரவியது. பாடலும், வீணையும், மத்தளம் முதலிய கருவிகளும் கண் அடைத்து உறங்கின. ஆகாயமும் ஒளியாகிய கண் அடைத்து உறங்கின. விண்ணுக்குச் சூரியன், சந்திரன், நட்சத்திரம் முதலானவை கண்கள். “பகலுக்கு ஒரு கண். இரவுக்கு ஆயிரம் கண்” என்பது புத்தெழுச்சிப் பாவலர் கண்டது. இருள் பரவியது விண் இமைமூடி உறங்குவது போல் எனத் தற்குறிப்பேற்றமாயிற்று. கண் அடைத்தன, கண் இமை அடைத்தன இரு முறை பிரித்துக்கூட்டப்பெற்றது. முரசு முதலியவற்றின் மண் பூசிய வட்டவுறுப்பைக் கண் என்பர். அதற்கேற்ப உறக்கம் கூறுதல் கவிமரபு. முழவங் கண்துயிலாத முதுநகர் என்பர் தேவர் (சிந்தா - 850)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The songs of the many toddy-drinking minstrels closed their eyelids of melody;
  2. darkness spread as if the sky had closed its eyelids; the vīṇās
  3. closed their cool eyelids; the eyes of the drums that give out booming sound closed;
  4. eyes closed their lids; the doors were closed.

What the poem says

The poet shows the whole city falling asleep with one repeated image, the closing of eyelids. The singers' songs close their eyes, the vīṇās close theirs, and the drums close their 'eyes', the round skin faces of a drum being called its eyes in Tamil. The people shut their eyes, and the doors are shut.

Even the sky seems to close its eyelids, its eyes being the sun, moon and stars, and darkness spreads. Giving a fanciful cause to darkness like this is the figure Tamil poetics calls taṟkuṟippēṟṟam.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇ imai aṭaitta pala kaḷ porunar pāṭal
viṇ imai aṭaitteṉa viḷaintatu iruḷ vīṇai
taṇ imai aṭaittaṉa taḻaṅku icai vaḻaṅkum
kaṇ imai aṭaittaṉa aṭaittaṉa kapāṭam.