கம்பராமாயணம் 5045 · சுந்தர 3.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நரந்தம் முதல் - நரந்தம் முதலாகக் கூறப்பெற்ற; வெண்மலர் - வெண்மையான பூக்கள்; விரிந்தன - மலர்ந்தன; வளாகத்து - அவ்விடத்தில்; உரிஞ்சி வருதென்றல் - மலர்களை உராய்ந்து வந்த தென்றல்; உணர்வு - உணர்ச்சியை; உண்டு - கவர்ந்து; அயல் உலாவ - பக்கத்தில் இயங்க (அதனால்); கருங்கண் வரு - (கூட்டமின்மையால்) கருத்த கண்களில் வெளிப்படும்; துள்ளி - துளிகள்; தரு - தோற்றுவித்த; வெள்ளம் - நீர்ப்பெருக்குகள்; சொரிந்தன - விழுந்தன; பிரிந்தவர்தம் - காதலரைப் பிரிந்தவர்களுடைய; எஞ்சு - (நாணம் முதலானவை நீங்க) மிஞ்சியிருந்த; தனிநெஞ்சம் - தனியான உள்ளம்; எரிந்தன - (பிரிவாற்றாமல்) வெந்தன.
கண்கள் சொரிந்த அருவி நெஞ்சக் கனலை அவிக்கவில்லை. நரந்தம், புல்லென்பர் சிலர். மலர் என்பர் சிலர். அழகர் நரந்தநறுமலர் என்னும் பரிபாடலுக்கு (பரி 10 - 14 - 15) நரந்தம் போலும் நறியமலர் என்றார். இனியர், “நரந்தம் நாறிருங்கூந்தல்” என்னும் குறிஞ்சிக் கலிக்கு (குறிஞ்சி 18 - 5) நரந்தம் பூ நாறும் கரிய கூந்தல் என்று உரை வகுத்தார். கவிச்சக்கரவர்த்தி ‘வெண்மலர்’ என்றதால் இனியரை ஆதரித்தனர் போலும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The white flowers, narantam and the rest, opened; and as the south breeze,
- brushing over them in the gardens, came and moved close by, drinking up their senses,
- floods made of the drops from their dark eyes poured down,
- and the lonely hearts of those parted from their lovers, all that was left of them, burned.
What the poem says
Not everyone in Ilaṅkai sleeps peacefully. Night-blooming white flowers open, and the soft south wind that has passed over them makes lovers who are apart from each other ache with longing.
Their dark eyes pour out floods of tears, yet even these cannot put out the fire burning in their lonely hearts. The south breeze and opening flowers are standard images in Tamil poetry that stir up the pain of separation.