கம்பராமாயணம் 5046 · சுந்தர 3.164

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்கரிய ஆசை உற வீயா
விளக்கு என விளங்கும் மணி மெய் உறு விளக்கம்.

பொருள் · Meaning in Tamil

பகை சோர - பகைவர்கள் தளர்ச்சியடைய; உயர்வோரின் - சிறப்பை அடைபவரைப் போல; இளக்கர் - இளகும் தன்மையுடைய; இழுது எஞ்ச - நெய்யானது குறைய; விழும் - ஒளி குறைந்த; எண் அரு விளக்கை - அளவற்ற விளக்குகளை; தென்றல் - தென்றல் காற்று; துளக்கியது - அணைத்துவிட்டது; அப்போது மெய் - மகளிரின் மேனியிலும்; உறுமணி - அம்மேனியில் பொருந்திய ஆபரணங்களிலும் (உள்ள); விளக்கம் - ஒளிகள்; அளக்க அரிய - அளவிடமுடியாத; அளக்கரொடு - கடலிலும்; ஆசை - திசைகளிலும்; உற - மிகுதியாக; வீசா - வீசி; விளக்கு இனம் - விளக்கைப் போல; விளக்கும் - பிரகாசிக்கும்.

ஆடவர்களுக்கும் பெண்களுக்கும் கலவியிலே கடலுக்கு மிகுதியான ஆசை பொருந்தும்படிக்கு எரிந்த விளக்கைக் காற்று அவித்தவுடனே அந்த பெண்கள் அழகிய மேனியின் ஒளியாகிய விளக்கு பரந்தது என்னும் விளக்கம் கம்பராமாயணக் கருப்பொருள் ஏட்டில் உள்ளது (அண்ணாமலைபகு) “இருள் துரப்பன, த விளக்கமோ? மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே” (கம்ப /43.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The countless lamps, sinking low as their melting ghee ran out,
  2. the south wind made flicker out, as the rising man makes his foes give way;
  3. then, flinging their light over the measureless sea and all the quarters,
  4. the lustre of the gems on the women's bodies shone like a host of lamps.

What the poem says

Late in the night the oil in the lamps runs low and the south wind blows them out, as easily as a rising man brings down his weakened enemies.

Yet the rooms do not go dark. The jewels on the women's bodies, and their bodies themselves, give off so much light that it spreads like lamplight over the sea and in every direction. The commentary links this to an earlier verse saying that what drives away darkness in Ilaṅkai is not lamps but the women's shining bodies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷakkar iḻutu eñca viḻum eṇ aru viḷakkait
tuḷakkiyatu teṉṟal pakai cōra uyarvōriṉ;
aḷakkaroṭu aḷakkariya ācaiyuṟa vīcā
viḷakku iṉam viḷakku maṇi mey uṟu viḷakkam.