கம்பராமாயணம் 5048 · சுந்தர 3.166

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயபொழுது அம்மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரி ஒன்றொடு ஒருகோடி துருவிப் போய்த்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப் பகையை வென்றான்.

பொருள் · Meaning in Tamil

ஆயபொழுது - (இலங்கை உறக்கத்திலிருந்த) அப்பொழுது; வினைப் பகையை வென்றான் - வினையாகிய பகையை வென்ற அனுமன்; அம் மதில் அகத்து - அந்த மதிலுக்குள்ளே; அரசர் வைகும் - அரசர்கள் தங்கியிருக்கும்; தூய - தூய்மையான; ஒன்றொடு ஒரு கோடி தெரு - இரண்டு கோடித் தெருக்களை; துருவிப் போய் - தேடி அப்புறத்தே சென்று; தீயவன் - இராவணனின்; இருக்கை அயல் செய்த - அரண்மனையின் பக்கலில் அமைக்கப்பட்ட; மேயது - பொருந்திய; அகழ் இஞ்சி - அகழியையும் மதிலையும்; கடந்தனன் - தாண்டினான்.

அனுமன், அரசர்கள் இருக்கும் இரண்டு கோடித் தெருக்களைக் கடந்து இராவணனின் அரண்மனையைச் சார்ந்த அகழியையும் மதிலையும் கடந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that hour, searching through the clean streets inside that wall
  2. where princes dwell, one crore and one crore more, he went on,
  3. and crossed the moat and wall that were built
  4. around the evil one's dwelling, he who had conquered the enemy that is karma.

What the poem says

While the city sleeps, Aṉumaṉ searches through two crores of streets where the demon nobles live inside the wall. Then he crosses the last moat and wall, which ring the palace of Irāvaṇaṉ, the evil one.

Aṉumaṉ is called the one who has conquered the enemy that is karma, the deeds that bind a soul to rebirth. The title reminds the reader of his spiritual purity even as he moves through this city of pleasure.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyapoḻutu ammatil akattu aracar vaikum
tūya teru oṉṟoṭu orukōṭi turuvip pōyt
tīyavaṉ irukkai ayal ceyta akaḻ iñci
mēyatu kaṭantaṉaṉ viṉaip pakaiyai veṉṟāṉ.