கம்பராமாயணம் 5049 · சுந்தர 3.167

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களாத்
தாரகைக் குழுவில் தழைத்து ஓங்கிய
நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) போர் இயற்கை - போர்புரிதலை இயல்பாகக் கொண்ட; இராவணன் - இராவணனுடைய; பொன்மனை - அரண்மனை; சீர் - சிறப்பும்; இயற்கை - அழகும்; நிரம்பிய - நிறைந்துள்ள; திங்களா - சந்திரன் போல; தாரகைக்குழுவின் - நட்சத்திரக் கூட்டங்களைப் போல; தழுவித் தொடர் - சுற்றிலும் அணைத்துத் தொடர்ந்துள்ள; நாரியர்க்கு - மகளிர்களுக்கு; உறைவு ஆம் இடம் - இருப்பிடமாய் அமைந்த இடத்தை; நண்ணினான் - அடைந்தான். இராவணன் வீடு சந்திரனைப் போலவுள்ளது. அவன் காதலியர்களின் இல்லங்கள் நட்சத்திரங்களைப் போல் இருந்தன என்க. திங்கள் ஆய் - என்பதிலுள்ள “ஆய்” என்பது உவம உருபுப் பொருளைத் தந்தது. “எனக்கு ஆவார் ஆர் ஒருவர்” என்னும் பொய்கைப் பிரான் வாக்கை உன்னுக. (திவ்ய முதல் திரு 89)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the golden palace of war-loving Irāvaṇaṉ
  2. as a moon full of splendour and beauty,
  3. he reached the place where the women dwelt, clustered around it
  4. and following it like a host of stars.

What the poem says

The metre changes again as Aṉumaṉ reaches the heart of the palace grounds. Irāvaṇaṉ's golden palace sits in the middle like the full moon.

All around it, like a cluster of stars, are the mansions where his many wives and consorts live. Aṉumaṉ has come to the women's quarters, where he hopes he may find Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōr iyaṟkai irāvaṇaṉ poṉ maṉai
cīr iyaṟkai nirampiya tiṅkaḷāt
tārakaik kuḻuviṉ taḻuvit toṭar
nāriyarkku uṟaivu ām iṭam naṇṇiṉāṉ.