கம்பராமாயணம் 5050 · சுந்தர 3.168

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) முயல் - முயலாகிய; கருங்கறை - கறுத்த களங்கம்; நீங்கிய - இல்லாத; மொய்மதி - பூரண சந்திரனை; அயர்க்கும் - ஒத்திருக்கும்; வாள்முகத்து - ஒளிமிக்க முகத்தை உடைய; ஆர் அமுது அன்னவர் - அரிய அமுதம் போன்ற; இயக்கர் மங்கையர் யாவரும் - எல்லா யட்சப் பெண்களும்; ஈண்டினார் - நெருங்கியிருந்து; நயக்கும் - விரும்பியிருக்கும்; மாளிகை வீதியை - மாளிகை நிரம்பிய வீதியை; நண்ணினான் - அடைந்தான்.

களங்கம் நீங்கிய முழுமதி போன்ற முகத்தை உடைய யட்சப் பெண்கள் வாழும் வீதியை அனுமன் அடைந்தான். அயிர்த்தல் - என்னும் வினைச்சொல் உவம உருபுப் பொருளைத் தந்தது. எல்லாவினைச் சொற்களும் உவம உருபு போல அமைவதை அறிக. இதனை இனியர் உவம வாசகம் என்பர் (சிந்தா. 10.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With shining faces like the full moon
  2. freed of its dark stain, the hare, women like rare nectar,
  3. the Yakṣa maidens, all crowded together:
  4. he came to the street of mansions where they love to live.

What the poem says

Aṉumaṉ comes to a street of mansions where the Yakṣa women live, celestial beings whom Irāvaṇaṉ has carried off to Ilaṅkai.

Their faces are like the full moon, but without the dark mark of the hare that Indian tradition sees on the moon. They are as precious as the nectar of immortality.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muyal karuṅ kaṟai nīṅkiya moym mati
ayarkkum vāḷ mukattu ār amutu aṉṉavar
iyakkar maṅkaiyar yāvarum īṇṭiṉar
nayakkum māḷikai vītiyai naṇṇiṉāṉ.