கம்பராமாயணம் 5051 · சுந்தர 3.169
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விழைந்த வெவ்வினை - பொருள்களை விரும்புவதால் உண்டான வினைகளை; வேர் அற - மூலம் அற்றுப்போக; வீசினான் - ஒதுக்கித் தள்ளிய அனுமன்; (அந்த மாளிகைகளில்) தழைந்த - மிக்குள்ள; ஒளி - பிரகாசம்; மொய் - மொய்த்துள்ள; மணி - மணிகள்; பெய் - பதிக்கப்பெற்ற; தாழ்தொறும் - தாழ்ப்பாள்கள் தோறும்; இழைந்த நூலினும் - இழைக்கப் பெற்ற நூலைவிட; இன் - இனிமையான; இளங்காலினும் - தென்றலைவிட; நொய்தினின் - நுட்பமாக; மெய் உற - மேனி அமைய; நோக்கினான் - பார்த்தான்.
அனுமன், நூலைவிடவும், தென்றலைவிடவும் நுட்பமான மேனியைப்பெற்று தாழ்கள் தோறும் நுழைந்து பார்த்தான். தாழ் என்றது கதவுத் துளைகளை. முத்தொள்ளாயிரம் கதவம் தொளை என்று குறிப்பிடும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through every latch set with jewels thick with shining light,
- more finely than a spun thread, more finely than the sweet young breeze,
- he slipped in, making his body slight, and looked;
- he who had flung away, root and all, the cruel deeds born of desire.
What the poem says
To look inside the Yakṣa women's mansions, Aṉumaṉ makes his body thinner than a thread and lighter than a breeze. He slips in through the jewelled keyholes of the doors.
He is described as one who has torn up by the roots all the karma that comes from desire. This matters here: he can look at these sleeping women without any stain on his mind, because he is only looking for Cītai.