கம்பராமாயணம் 5056 · சுந்தர 3.174

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈரத் தென்றல் இழுக மெலிந்து தம்
பாரக் கொங்கையைப் பார்த்து அந்தப் பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் எண்ணா உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர்.

பொருள் · Meaning in Tamil

சிலர் - வேறு சில யட்சப் பெண்கள்; ஈரத் தென்றல் - குளிர்ந்த தென்றற் காற்று; இழுக - உராய (அதனால்); மெலிந்து - இளைத்து; தம் - தம்முடைய; பாரக் கொங்கையை - பாரமான தனங்களை; பார்த்தனர் - பார்த்து; பாதகன் - இராவணனின்; வீரத் தோள்களின் - வீரம் மிக்க தோள்களினுடைய; வீக்கம் நினைந்து - கருவத்தை எண்ணி; உயிர் சோர சோர - உயிர் மிகத் தளர்ச்சியடைய; துளங்குகின்றார் - கலக்கம் அடைகின்றனர்.

பாரமான கொங்கைகட்கும், கருவம் உற்ற தோள்களுக்கும் இடை நின்று யட்ச மகளிர் கலங்குகின்றனர். பிரிவுக் காலத்து மகளிர் கொங்கையை வெறுப்பர். “வாரிய பெண்ணை” என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலைப் பார்க்கவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the cool south wind brushed against them, they grew thin, and looked
  2. at their own heavy breasts; thinking of the swelling might
  3. of the wicked one's heroic shoulders, their life
  4. ebbing and ebbing, some were trembling.

What the poem says

The cool south breeze, which stirs up longing in lovers who are apart, wastes these women away. They look at their heavy breasts and remember the mighty shoulders of Irāvaṇaṉ, whom the poet calls the wicked one.

Their life seems to drain out of them little by little, and they tremble. In Tamil love poetry a woman apart from her lover comes to resent her own beauty, since there is no one to enjoy it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īrat teṉṟal iḻuka melintu tam
pārak koṅkaiyaip pārttaṉar pātakaṉ
vīrat tōḷkaḷiṉ vīkkam niṉaintu uyir
cōrac cōrat tuḷaṅkukiṉṟār cilar.