கம்பராமாயணம் 5057 · சுந்தர 3.175

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நக்க செம்மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல்பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர்.

பொருள் · Meaning in Tamil

சிலர் - வேறு சில யட்சமகளிர்; நக்க - விளங்குகின்ற; செம்மணி நாறிய - சிவந்த மணிகள் வெளிப்படுத்திய; நாள் நிழல் - புத்தொளியானது; பக்கம் வீசுறு - பக்கங்களில் பரவப்பெற்ற; பள்ளியில் - படுக்கையில்; பல்பகல் - பலநாட்கள்; ஆசை - ஆசைகள்; ஒக்க - ஒரு சேர; உலக்க - தாக்க (அதனாலே); உலந்தவர் - தளர்ச்சியடைந்தவர்கள்; செக்கர் - சிவந்த; வான்தரு - அந்தி வானில் உதித்த; திங்கள் ஒத்தார் - சந்திரனைப் போன்றிருந்தனர்.

பெண் கிரகம் சந்திரன் என்று சோதிட நூல் கூறும். அதற்கேற்ப உவமை அமைந்தது. திங்கள் ஒத்தார் கீற்றுப் பிறையை ஒத்தார் என்பது பழைய உரை (அடை - பதி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On couches where the fresh glow given off by bright rubies
  2. spreads all around, for many days
  3. all their desires struck them at once and they wasted away;
  4. some were like the moon rising in the red evening sky.

What the poem says

Some of the women lie on beds bathed in the red glow of rubies. For many days longing has worn them down until they are thin and pale.

Pale against the red light, they look like the moon appearing in a red sunset sky. An older commentary takes the comparison further: wasted as they are, they are like the thin crescent moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nakka cemmaṇi nāṟiya nāḷ niḻal
pakkam vīcuṟu paḷḷiyil palpakal
okka ācai ulakka ulantavar
cekkar vāṉ taru tiṅkaḷ ottār cilar.