கம்பராமாயணம் 5058 · சுந்தர 3.176

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - சில யட்சமகளிர்; வாளின் - ஒளிகளாலே; ஆற்றிய - செய்யப்பெற்ற; கற்பகவல்லியர் - கற்பகக் கொடி போன்ற சேடியர்கள்; தோளின் - கைகளால்; நாற்றிய - தொங்கவிடப்பட்ட; தூங்கு அமளி - தொங்கும்படுக்கையில்; துயில் நாளினால் - உறங்கும் சமயத்தில்; செவியில் புகும் - காதுகளிற் புகுந்த; நாம யாழ்த் தேளினால் - அச்சம் தரும் யாழாகிய தேளால்; திகைப்பு எய்துகின்றார் - கலக்கம் அடைகின்றனர்.

திகைத்தல் - செயலற்றிருத்தல் என்றும் கூறலாம். யாழ் என்றது யாழின் இசையை. செவியிற் புகுவது இசையே, யாழன்று. தூங்கு அமளி - தூங்கு கட்டில். இனியர் (பாலைக்கலி 12) துலங்கு ஊர்தி - தூங்கு கட்டில் என்று வரைந்தார். நாமம் - அச்சம். தோளின் - டோளியைப் போல் என்று உரை வகுத்தவரும் உளர் (டோள் - அசையும் பல்லக்கு). நாளினால் என்பதில் உள்ள ஆல் இடப்பொருள் தந்தது. புள்ளினம் வீதி சேரும் பொழுதினால் (கலித் நெய்தல் 6)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On swinging couches hung up by the arms
  2. of maids like wishing-tree creepers made of light, at the hour of sleep,
  3. stung by the dreadful scorpion of the yāḻ
  4. that crept into their ears, some lay stunned.

What the poem says

Some women lie in swinging beds hung up by maids who shine like vines of the heavenly wishing tree. As they try to sleep, the music of a yāḻ, the ancient Tamil harp, drifts into their ears.

For a woman longing for her absent lover, sweet music only sharpens the pain. So the poet calls it a terrifying scorpion that crawls into the ear and stings, leaving them stunned and helpless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷiṉ āṟṟiya kaṟpaka valliyar
tōḷiṉ nāṟṟiya tūṅku amaḷit tuyil
nāḷiṉāl ceviyil pukum nāma yāḻt
tēḷiṉāl tikaippu eytukiṉṟār cilar.