கம்பராமாயணம் 5059 · சுந்தர 3.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சிலர்) சில யட்சமகளிர்; மேருவை - மகா மேரு மலையை; கால் - அதன் இரண்டு கோடியையும்; வளைத்து - வளையச் செய்து; கவ்வு தீக்கணை - இலக்கைப் பற்றும் நெருப்பு அம்பை; எவ்வினான் - ஏவின சிவபிரான் வீற்றிருக்கும்; மலை - கயிலாய மலையை; ஏந்திய - அனாயாசமாக எடுத்த; ஏந்து தோள் - இராவணனின் தோள்களை; வவ்வு சாந்து - கவர்ந்த சந்தனத்தை; வவ்விய - கொள்ளையடித்த; தம் - தம்முடைய; மாமுலை - பெரிய தனங்களின்; செவ்வி கண்டு - பெருமிதத்தைப் பார்த்து; குலாவுகின்றார் - குதூகலம் அடைகின்றார்.
சிவபிரானினும் வலிமை மிக்கவன் இராவணன். அவன் மார்புச் சந்தனத்தை வவ்வியதால் தம் கொங்கை அவனினும் சிறப்புடையது என யட்சமகளிர் கருதினர். செவ்வி - பெருமிதம். எவ்வுதல், ஏவுதல். ‘வேறுநின்று எவ்விடத் துணிந்து’ (வாலிவதை - 10) ஏந்து தோள் - புயம் என்னும் பொருள் தந்தது. இதனை இனியர் பெயராய் நின்றது என்பர். ‘அடியளந்தான் தாஅயது’ (நுண்பொருள் 6. ப)
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who bent Mēru at both its ends and loosed
- the devouring fire-arrow: his mountain was lifted by the raised shoulders
- whose sandal paste their own great breasts had taken;
- seeing that glory, some were rejoicing.
What the poem says
Other women are happy. Their breasts still carry the sandal paste rubbed off Irāvaṇaṉ's chest when they embraced him.
Those shoulders once lifted Mount Kailāsa, home of Civaṉ, the god who bent Mount Mēru into a bow and shot a fiery arrow to burn the three flying cities of the demons. Since Irāvaṇaṉ lifted the mountain of that mighty god, and their breasts have taken the sandal from Irāvaṇaṉ, they feel their breasts have won over the mightiest of all, and they glow with pride.