கம்பராமாயணம் 5061 · சுந்தர 3.179

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஒராயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் வளையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

நீதியின் எய்தினான் - நீதியில் நடக்கும் அனுமன்; இனைய தன்மை - இப்படிப்பட்ட இயல்பைக் கொண்ட; இயக்கியர் - யட்சப் பெண்கள்; ஈண்டிய - தங்கியிருக்கும்; ஆயிரம் ஆயிரம் - பத்து லட்சம்; மனைவாயில் - வீடுகளின் வாசல்களில்; போய் - நுழைந்து சென்று; அனையவன் குலத்து - அந்த இராவணனின் குலத்தில் பிறந்த; ஆயிழையார் இடம் - அரக்கியர் தங்கிய தெருவை; நினைவின் - எண்ணத்தைப் போல் (விரைவாக); எய்தினன் - அடைந்தான்.

அனுமன் இயக்கியர்கள் தங்கிய வீடுகளை ஆராய்ந்து பார்த்தபின் அரக்கியர்கள் தங்கிய தெருவை அடைந்தான். இல்வாய் என்பது வாயில் என மாறி நின்றது. உள்ளூர், முற்பகல், பிற்பகல், நுனிக்கொம்பர், கடைக்கண், கீழ்நீர் என்பனவும் இப்படிப்பட்டன. இங்ஙனம் வருவதை இலக்கண மரூஉ என்பர். ஓர் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Passing through the doorways of a thousand thousand homes
  2. where Yakṣa women of this kind were gathered,
  3. he reached, swift as thought, the quarter of the bejewelled women
  4. of that one's own race, he who walks in righteousness.

What the poem says

Having searched the million homes of the Yakṣa women, Aṉumaṉ moves on, quick as a thought, to the quarter where the demon women of Irāvaṇaṉ's own race live.

He is again described as one who walks in righteousness. His search through the women's quarters is a duty, not idle curiosity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiya taṉmai iyakkiyar īṇṭiya
maṉai āyiram āyiram vāyil pōy
aṉaiyavaṉ kulattu āyiḻaiyār iṭam
niṉaiviṉ eytiṉaṉ nītiyiṉ eytiṉāṉ.