கம்பராமாயணம் 5062 · சுந்தர 3.180

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எரிசுடர் மணியின் செம் கேழ் இளவெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவின் நீங்கி, ஆசையும் தாமுமே புக்கு,
ஒருசிறை இருந்து, போன உள்ளத்தொடு ஊடுவாரும்.

பொருள் · Meaning in Tamil

எரிசுடர் - நெருப்பைப் போன்ற; மணியின் - மணிகளின்; செம்கேழ் இளவெயில் - சிவந்த நிறத்தையுடைய இளமையான வெயிலானது; இடை விடாது - இடைவிடாமல்; விரி இருள் பருகி - பரவிய இருளைக் குடிப்ப (அதனால்); நாளும் - எப்போதும்; விளக்கு இன்றி - விளக்குகள் இல்லாமல்; விளங்கும் மாடத்து - விளங்குகின்ற மாளிகையில்; அரிவையர் குழுவும் நீங்க - மகளிர் கூட்டம் விலகிச் செல்ல; ஒரு சிறை இருந்து - ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு; ஆசையும் தாமுமே ஆய் - காதலும் தாங்களுமாக; போன உள்ளத்தோடு - (இராவணன் பால் சென்ற) மனத்துடன்; ஊடுவாரும் - பிணங்குபவர்களும்.

குழுவும் - என்பதில் உள்ள “உம்” அசை. காமக்கடல் மன்னும் உண்டே (குறள்) ‘உம்’ அசை என்று பரிமேலழகர் வரைந்தார். அரிவையர் குழு நீங்கத் தாமும் தம் ஆசையுமாக இருந்தோர் இராவணன்பால் சென்ற உள்ளத்தை வெறுத்தனர். காமத்துப்பால், நெஞ்சொடு கிளத்தல் இப்பாடலுக்கு மூலம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In mansions that shine with no lamps, day and night, because the red young sunlight
  2. of blazing gems drinks up the spreading dark without a pause,
  3. with their bands of companions gone, only themselves and their longing,
  4. sitting apart, some quarrel with their own hearts that have gone away.

What the poem says

Aṉumaṉ now looks at the demon women of Irāvaṇaṉ's race. Their mansions need no lamps, because the glow of their gems swallows up the darkness.

Some have sent their companions away and sit alone with their longing. They quarrel with their own hearts, which have left them to go after Irāvaṇaṉ. Scolding one's own heart is a theme of the love section of the Tirukkuṟaḷ, which the commentary names as the source of this verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ericuṭar maṇiyiṉ ceṅkēḻ iḷaveyil iṭaiviṭātu
viri iruḷ paruki nāḷum viḷakku iṉṟi viḷaṅkum māṭattu,
arivaiyar kuḻuvum nīṅka, ācaiyum tāmumē āy,
oruciṟai iruntu, pōṉa uḷḷattōṭu ūṭuvārum.