கம்பராமாயணம் 5064 · சுந்தர 3.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சவிபடு - ஒளி பொருந்திய; தகைசால் வானம் - சிறப்பு மிக்க ஆகாயம்; மேனி ஆக - உடலாகவும்; குவியும் மீன் - நெருங்கிய நட்சத்திரங்கள்; ஆரம் ஆக - முத்து மாலையாகவும்; மின்கொடி - மின்னற் கொடிகள்; மருங்குல் ஆக - இடையாகவும்; கவிர் ஒளிர் - முருக்கம் பூவைப் போல் ஒளி விடுகின்ற; செக்கர் - செவ்வானம்; கற்றை ஓதியா - தொகுதியுடன் கூடிய கூந்தலாகவும்; மழை - மேகமானது; உண்கண்ணா - மை பூசிய கண்களாகவும்; அவிர்மதி - பிரகாசிக்கும் பிறைச்சந்திரன்; நெற்றியாக - நெற்றியாகவும் (அமைய); அந்தி வான் ஒக்கின்றாரும் - அந்தி வானத்தை ஒத்திருப்பவர்களும்.
அரக்கியர் கருநிறத்தவர்கள். ஆதலின் சவிபடுவானம் என்பதற்கு ஒளியழிந்த (இருண்ட) வானம் என்று பொருள் கோடல் சிறக்கும் போலும் - ஒளி மிக்க வானம் அரக்கியர்க்கு ஒவ்வா. மதி என்றது பிறையை - பிறையை அணிந்த இறைவனை ‘குளிர் மதிக் கண்ணியான்’ என்றார் தேவர் (சிந்தா 208) தான் - ஓர் - உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the fine sky, its light faded, as their body,
- the clustered stars as their necklace, a streak of lightning as their waist,
- the red glow of evening, bright as murukkam flowers, as their mass of hair, the rain cloud as their kohl-lined eyes,
- and the shining crescent as their forehead, some were like the evening sky.
What the poem says
The poet paints some of the demon women as the evening sky itself. The darkening sky is their dark body and the gathering stars are their pearl necklace. A flash of lightning is their slender waist, the red sunset glow their reddish hair, the dark rain clouds their kohl-lined eyes, and the crescent moon their forehead.
The commentary reads the 'sky' as a sky whose light has faded, since the demon women are dark-skinned.