கம்பராமாயணம் 5065 · சுந்தர 3.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேல் நிவந்து - மேல்நோக்கி உயர்ந்து; எழுந்த - நிமிர்ந்துள்ள; மாட - மாளிகையின்; வெண் - வெண்மையான; நிலா முன்றில் - நிலாமுற்றத்தை; பண்ணை - விளையாட்டுக்கு; நண்ணி - அடைந்து; கையின் - கைகளினாலே; வான மீன் - ஆகாய நட்சத்திரங்களை; வாரி - அள்ளி எடுத்து; பானல் - நீலோற்பலம் போன்ற; உண்கண் - மை பூசிய கண்கள்; வண்ணம் - நிறமும்; படி - இயல்பும்; முறைமாற - இயல்பிலிருந்து பிறழ; சோனை போன்று அளிகள் பம்பும் - விடாப் பெருமழை போல வண்டுகள் இடையறாது மொய்க்கும்; சுரிகுழல் கற்றை சோர - சுருண்ட கூந்தல் தொகுதி கலைந்து கீழே வீழ; மணிக் கழங்கு - கழங்கு விளையாட்டை; ஆடுவாரும் - ஆடுபவர்களும். நட்சத்திரங்களின் ஒளியில் கண்களின் நிறம் பல நிறம் பெற்றன. பல பக்கம் செல்லும் கண்கள் மேலும் கீழும் செல்வதால் தம் இயல்பு திரிந்தன. கண்ணும் - உம் - அசை (திருக்குறள் 1164) பண்ணை - விளையாட்டு. கழங்கு என்றது ஆகுபெயராய் ஆட்டத்தை உணர்த்திற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their kohl-lined eyes like blue lilies changing colour and nature by turns, for play,
- their masses of curled hair, swarmed by bees like a steady downpour, falling loose,
- they went up to the white moonlit terraces of the mansions that rise up high,
- and scooping up the stars of the sky in their hands, some played at jewel jacks.
What the poem says
Some demon women, unable to sleep, climb to the moonlit roof terraces of their tall mansions. The towers are so high that they can scoop up the stars with their hands and use them as playing pieces in kaḻaṅku, a girls' game of tossing and catching pebbles, like jacks.
As they play, their eyes dart up and down after the pieces and change colour in the starlight, and their bee-covered hair comes loose and tumbles down.