கம்பராமாயணம் 5066 · சுந்தர 3.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உம்பர் நாட்டு - விண்ணுலகத்தைச் சார்ந்த; குழை முகத்து ஆயம் - காதணியணிந்த முகத்தை உடைய மகளிர்; உழை உழை - (ஆகாயத்தில்) இடங்கள் தோறும்; பரந்த - பரவியுள்ள; வான யாற்று நின்று - ஆகாய கங்கையிலிருந்து; தந்த புனல் - கொண்டு வந்த தண்ணீர்; குளிர்ப்பு இல - குளிர்ச்சியில்லாதன; என்று - என்று கருதி; ஊடி - அவற்றை வெறுத்து; இழை தொடுத்து - ஆபரணங்கள் தொடுக்கப்பெற்று (அதனால்); இலங்கும் மாடத்து - விளங்கும் உப்பரிகையில்; இடை - இடையானது; தடுமாற - வருத்தம் அடைய; ஏறி - ஏறிப் போய்; மழை - மேகத்தை; பொதுத்து - துளையிட்டு; ஒழுகும் நீரால் - பொழியும் நீர்ப்பெருக்கால்; மஞ்சனம் ஆடுவாரும் - நீராடுகின்றவர்களும். யாற்று நீரினும் மேகநீர் குளிர்ச்சியுடையது. “மந்தி... சுனைநீர்... குளிர்ந்தில என்று ஊடி.... கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே” (ஈங்கோய் 19) இரணியவதைப் படலத்தும் இந்தக் கருத்துப் பேசப்படுகிறது. அங்கு கொண்டல் நீரினும் புறக்கடல் நீர் குளிர்ந்தது என்று பேசப்பட்டது (கம்ப. 6192)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sulking that the water brought from the river of the sky, spread out place after place,
- by the band of heavenly maids with earrings on their faces, was not cool,
- they climbed, their waists faltering, into upper rooms bright with strung jewels,
- pierced the clouds, and some bathed in the water that streamed down.
What the poem says
Captive heavenly maids bring water for the demon women's bath from the Ganges of the sky, the river of heaven. Some women complain that even this is not cool enough to soothe their love-fever.
So they climb up to the highest rooms of their jewelled mansions, their slender waists straining with the effort, pierce the rain clouds, and bathe in the water that pours out. The commentary points to a Tamil devotional poem where a monkey, finding pool water too warm, drinks straight from the clouds.