கம்பராமாயணம் 5067 · சுந்தர 3.185

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பன்னக அரசர் செம் கேழ்ப் பணா மணி வலியில் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆகப்
பொன்னின் நன் பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும்.

பொருள் · Meaning in Tamil

இன் உயிர்க் கணவன் - இனிய உயிர் போன்ற இராவணன்; பன்னக அரசர் - பாம்புகளின் தலைவனான ஆதிசேடனின்; செங்கேழ் - சிவந்த நிறம் மிக்க; பணாமணி - படத்து மணிகளை; வலிதின் பற்றி - வலிமையால் கவர்ந்து; ஈந்தான் - (எனக்குக்) கொடுத்துள்ளான்; ஆம் - எனக்கு பரிசப் பொருளாம்; என - என்று கூறி; இருத்தி - (அவற்றை) வைத்துக் கொண்டு; விஞ்சை மன்னவர் - வித்தியாதர வேந்தர்களின்; முடியும் - கிரீடங்களையும்; பூணும் - ஆபரணங்களையும்; மாலையும் - மாலைகளையும்; பணையம் ஆக - பந்தயப் பொருள்களாக வைத்து; பொன் - தங்கத்தாற் செய்யப் பெற்ற; அணி - அழகிய; பலகை - சதுரங்கப் பலகையில்; சூது - சூதாட்டப் போரை; துயில்கிலர் - உறங்காமல்; பொருகின்றாரும் - செய்கின்ற சிலரும்.

பன்னக அரசர் - ஆதிசேடன் முதலியவர். பணையம் - பந்தயப் பொருள். இராவணன் வழங்கிய பொருளாதலின் ‘பணாமணி’ பந்தயப் பொருளாக வைக்கப்படவில்லை - அரக்கியர்க்கு வித்தியாதரவேந்தர்களின் முடிமுதலானவை பணையம் பொருளாயின என்றதனால் இலங்கையின் செல்வவளம் பேசப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The red hood-jewels of the serpent kings, seized by force,
  2. they kept aside, saying, 'My dear husband, my life, gave these to me';
  3. and staking the crowns, ornaments and garlands of the Vidyādhara kings,
  4. some, not sleeping, fought at dice on golden boards.

What the poem says

Some demon women stay awake gambling at dice on golden boards. Their stakes are crowns, jewels and garlands taken from the Vidyādhara kings, a race of heavenly beings Irāvaṇaṉ has defeated.

They do not stake the red gems Irāvaṇaṉ tore from the hoods of the serpent kings, because those were gifts from their beloved husband. Spoils of conquest are mere gambling chips to them, which shows the boundless wealth of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṉṉaka aracar ceṅ kēḻp paṇā maṇi valitiṉ paṟṟi,
iṉ uyirk kaṇavaṉ īntāṉ ām eṉa irutti, viñcai
maṉṉavar muṭiyum, pūṇum, mālaiyum, paṇaiyam ākap
poṉ aṇi palakaic cūtu, tuyilkilar porukiṉṟārum.