கம்பராமாயணம் 5068 · சுந்தர 3.186
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கற்பகப் பொதும்பர் - கற்பகச் சோலையில்; பொன் நகர் - அமராவதி நகரிலிருந்து கொணர்ந்த; தரளப் பந்தர் - முத்துப் பந்தலில்; சித்தியர் - சித்தியர் குல மகளிர்; தென் நகு குடம் - அழகு மிக்க குடமுழாவின் தாளஒத்துக்கேற்று; உள் பாடல் - உள்பட்ட பாடலை; இசைப்ப - பாட; தீம்சொல் - இனிய சொற்கள் பேசும்; பன்னக மகளிர் - நாகலோகத்து மகளிர்; வள்வார் - வலிய வாரால் கட்டப் பெற்ற; தண்ணுமை பாணி - மத்தளத்தின் தாளங்கள்; பேண - முழக்க; பொன் தோள் - அழகிய தோள்களையும்; இன்நகை - இனிய பற்களையும் உடைய; அரம்பைமாரை - விண்ணுலக மகளிர்; ஆடல் கண்டு - ஆடுதலைப் பார்த்து; இருக்கின்றாரும் - இருப்பவர்களையும். “தென்ன” என்று அமிர்தப் பாடல்’ என்பதனைப் பாடம் கொண்டு அதனுடன் கூடிய இனிய பாடல் என்க. ‘தென்ன’ என்பது ஆளத்தி. தென்ன என்னும் இசை வளர்த்து என்று சிலம்பு மேற்கோள் பகரும். (வேனிற் - 35) வள்வார் - வலிமை மிக்கவார். “வள்வார் முரசமொடு” என்றும் வருகின்ற (புற - வெண். 3-2) கொளுவுரை காண்க. பாணி - தாளம். கொட்டும் அசையும் தூக்கும் அளவும் - ஓட்டப் புணர்ப்பது பாணியாகும். (பஞ்ச மரபு 190 பக்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- While Siddha women sang songs set to the lovely pot-drum,
- and sweet-voiced serpent maidens kept the beat on drums strung tight with strong straps,
- under a pearl canopy brought from the golden city, in a grove of wishing trees,
- some sat watching the dance of the celestial dancers with golden shoulders and sweet smiles.
What the poem says
Some demon women sit up late watching a performance put on entirely by captives from other worlds. Siddha women sing, serpent maidens from the underworld play the drums, and the celestial dancers of Intiraṉ's heaven dance for them.
They sit under a canopy of pearls taken from Amarāvati, the golden city of the gods, in a grove of heavenly wishing trees. The beings who once entertained the gods now entertain Irāvaṇaṉ's household.