கம்பராமாயணம் 5086 · சுந்தர 3.204

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிலம் துடித்தன, நெடுவரை துடித்தன, நிருதர்தம் குலமாதர்
பொலம் துடித்தன மருங்குல் போல், கண்களும் புருவமும் பொன் தோளும்
வலம் துடித்தன, மாதிரம் துடித்தன, தடித்து இன்றி நெடுவானம்
கலந்து இடித்தன, வெடித்தன பூரண மங்கல கலசங்கள்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன் அம்மாளிகையில் நுழைந்தபோது) நிலம் - இலங்கையில் பல இடங்கள்; துடித்தன - அதிர்ந்தன; நெடுவரை - பெரிய மலைகள்; துடித்தன - அதிர்ந்தன; நிருதர்தம் குலமாதர் - அரக்கர்குலப் பெண்களின்; பொலந்துடிக்கு - அழகிய துடிக்கு; அமை - உவமையாகத்தக்க; மருங்குல்போல் - இடையைப்போல; கண்களும் - கண்களும்; புருவமும் - புருவங்களும்; பொன் தோளும் - அழகிய தோள்களும்; வலம் துடித்தன - வலப்பக்கத்தில் துடித்தன; மாதிரம் - திசைகள்; துடித்தன - அதிர்ந்தன; தடித்து இன்றி - மின்னல் இல்லாமலேயே; நெடுவானம் - நீண்ட மேகஆகாயம்; கலந்து - (ஒலி எல்லா இடத்திலும்) கலப்ப; இடித்தன - அதிர்ந்தன; பூரண மங்கல கலசங்கள் - நீர் நிரம்பிய மங்கல கலசங்கள்; வெடித்தன - சிதறின.

அமை - உவமையாகத்தக்க. கலந்து என்றும் செய்து என்றும் செய என் எச்சமாக மாற்றுக.

இடையைப்போல் கண் முதலானவை துடித்தன. இடையானது மெல்லியது ஆகையால் எப்போதும் துடிக்கும். அதுபோல் மற்றைய அங்கங்கள் துடித்தன. மகளிர்க்கு வலப்புறம் துடித்தல் கேட்டுக்கு அறிகுறி (கம்ப. 5100).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ground quaked, the tall mountains quaked; the eyes, brows and fair shoulders
  2. of the women of the demon race throbbed on the right side, like their waists
  3. slender as a lovely tuṭi drum; the quarters quaked; with no lightning the wide sky
  4. thundered all over; and the full pots set out for good fortune burst apart.

What the poem says

As Aṉumaṉ enters Irāvaṇaṉ's palace, Ilaṅkai is shaken by evil omens. The earth and the mountains tremble, the sky thunders without lightning, and the brimming pots set out for good luck crack open.

The right eyes, brows and shoulders of the demon women twitch. For a woman, twitching on the right side is a sign of coming misfortune. Their waists are compared to the tuṭi, a small drum narrow in the middle like an hourglass.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilam tuṭittaṉa, neṭuvarai tuṭittaṉa, nirutartam kulamātar
polam tuṭikku amai maruṅkul pōl, kaṇkaḷum puruvamum poṉ tōḷum
valam tuṭittaṉa, mātiram tuṭittaṉa, taṭittu iṉṟi neṭuvāṉam
kalantu iṭittaṉa, veṭittaṉa pūraṇa maṅkala kalacaṅkaḷ.