கம்பராமாயணம் 5097 · சுந்தர 3.215

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூரும் ஏனும்,
குன்று ஒழித்து ஒருமாக் குன்றின் அரிதில் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன் தோள் மணந்திடும் மடந்தை மார்கட்கு
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை!

பொருள் · Meaning in Tamil

மென்தொழில் - நுட்பமான வேலைப்பாடமைந்த; கலாபம் - தோகைகளையுடைய; மஞ்ஞை - மயில்; வேட்கை மீக்கூருமேனும் - ஆசை அதிகரித்தாலும்; குன்று ஒழித்து - ஒருமலையை விட்டு விட்டு; ஒரு மாக்குன்றின் - ஒரு பெரிய மலையினை; அரிதின் சேர் - வருத்தப்பட்டுச் சேர்கின்ற; கொள்கை போல் - தன்மை ஒப்ப; அருமயிலே அன்னார் - சிறந்த மயில் போன்ற மகளிர்; வன்தொழில் - போர்த்தொழிலும் (அதனால் பெற்ற); கொற்றம் - வெற்றியும் உடைய; பொன்தோள் - அழகிய தோள்களை; மணந்து - தழுவி; ஒன்று ஒழித்து - ஒரு தோளை விட்டுவிட்டு; ஒன்றின் ஏக - மற்றொரு தோளின்பக்கம் செல்ல; அரிய - அருமையாயிருக்கின்ற; தோள் ஒழுக்கினானை - தோள் வரிசையுடையவனை (இராவணனை).

மென்மை - நுட்பம். தோகையில் அமைந்த வண்ண நுட்பம், வடிவ நுட்பம். வன்தொழில் - போர் வீரர்களின் தோள்களின் தொழில் “போர்” என்க.

இராவணனின் ஒருதோள் புணர்ந்த மாதர் பின்னும் ஒரு தோளை இச்சித்துச் சென்று கூடுகிறது. ஒரு மலையில் உள்ள மயில் வேறு ஒரு மலைக்குப் பெயர்ந்து செல்வது போன்றது (பழையவுரை).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Just as a peacock with a finely wrought tail, however much its longing grows,
  2. leaves one hill and only with difficulty reaches another great hill,
  3. so women like rare peahens, embracing his golden shoulders mighty in hard war,
  4. find it hard to leave one and go on to the next: him with such a range of shoulders!

What the poem says

Irāvaṇaṉ has twenty arms and shoulders, and the poet turns this into an image from nature. His shoulders stand in a row like a range of mountain peaks.

A woman embracing one of them is like a peacock on a hilltop. However much she wants to move on to the next shoulder, it is as hard for her to get there as it is for a peacock to cross from one great hill to another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1meṉ toḻil kalāpa maññai vēṭkai mīkkūrumēṉum,
kuṉṟu oḻittu orumāk kuṉṟiṉ aritiṉ cēr koḷkai pōla,
vaṉ toḻil koṟṟap poṉ tōḷ maṇantu arumayilē aṉṉār
oṉṟu oḻittu oṉṟiṉ ēka ariya tōḷ oḻukkiṉāṉai!