கம்பராமாயணம் 5098 · சுந்தர 3.216
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தழுவாநின்ற - (தன்னைச்) சார்ந்துள்ள; கருங்கடல்மீது - கருமையான கடலின் மேலே (உள்ள); உதயகிரியில் - உதயமலையின் கண்ணே; சுடர்தயங்க - ஒளி விளங்க; எழுவான் என்ன - தோன்றும் சூரியனைப்போல; மின் இமைக்கும் - ஒளியைப் பரப்பும்; ஆரம் புரளும் - மணிமாலைகள் புரள்கின்ற; இயல்பிற்றாய் - தன்மை உடையதாய்; முழு வானவராய் - பூரணத்துவம் பெற்ற விண்ணவராய்; உலகம் ஒரு மூன்றும் - ஒப்பற்ற மூன்று உலகத்தையும்; காக்கும் - பாதுகாக்கும்; முதல் தேவர் - தலைமைத் தேவர்களின் (ஏவிய); மழுவாள் நேமி குலிசத்தின் - மழுப்படை, சக்கரம், வச்சிராயுதம் என்னும் ஆயுதங்களின்; வாய்மை - தப்பாத ஆற்றலை; துடைத்த - இல்லையாக்கின; மார்பானை - மார்பையுடையவனை (இராவணனை).
சூரியனைப்போன்ற ஆரங்கள். மழுவாள் - மழுப்படை. “மழுவாள் நெடியோன்” (மதுரைக் - 455) வாய்மை - தப்பாமை - வலம்படு வாய்வாள் ஏந்தி (புறம் 9 உரை). வாய்மை என்பதற்கு வலிமை என்றும் பொருள் கூறலாம். முடலைகொள் வாய்மை... துப்பு. (சூடா - நிக - பண்பு 28)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the sun rising in splendour on the eastern mountain
- over the dark sea that embraces it, with jewelled chains flashing like lightning rolling on it,
- him whose chest wiped out the unfailing power of the axe, the discus and the thunderbolt
- of the first gods who, perfect among the heavenly ones, guard the three peerless worlds!
What the poem says
Irāvaṇaṉ's broad dark chest, covered with flashing jewelled chains, looks like the sun rising over the dark sea from the eastern mountain.
That chest has blunted the weapons of the greatest gods who guard the three worlds: Civaṉ's battle-axe, Viṣṇu's discus and Intiraṉ's thunderbolt. Weapons that never fail have failed against him. The verse reminds us how formidable an enemy Irāmaṉ faces.