கம்பராமாயணம் 5100 · சுந்தர 3.218

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டனன், காண்டலோடும், கருத்தின் மூள் காலச் செந்தீ
விண்டன கண்கள், கீண்டு வெடித்தன கீழும் மேலும்,
கொண்டது ஓர் உருவ மாயோன் குறளினும் குறுகி நின்றான்,
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி.

பொருள் · Meaning in Tamil

மாயோன் - திருமால்; கொண்டது - (விரும்பி) ஏற்றுக் கொண்ட; உருவம் குறளினும் - அழகிய வாமன வடிவத்தைவிட; குறுகி நின்றான் - சுருங்கி இருந்த அனுமன்; திண் - வன்மைமிக்க; பத்துத் தலையும் - பத்து தலைகளும்; இருபது தோள்களும் - இருபது கைகளும்; தெரிய - தெரியும்படியாக; நோக்கிக் கண்டனன் - உற்றுப் பார்த்தான் (அப்போது); காண்டலும் கருத்தின் முன் - கண்ட அளவிலே (இவன் இராவணன்) என்று நினைவதன்முன்; கண்கள் - (அனுமனின்) கண்களிலிருந்து; காலச்செந்தீ - காலாக்கினிகள்; விண்டன - வெளிப்பட்டன; கீழும் - மண்ணுலகமும்; மேலும் - விண்ணுலகமும்; கீண்டு வெடித்தன - வெடித்துச் சிதறின.

ஊழிக்காலத்தில், ஆதிசேடனின் விடக் கனலும் சிவபிரானின் நெற்றித் தழலும் வடவாமுகாக்கினியும் உலகை அழிக்கும். ஆதலின் செந்தீ விண்டன என்று கூறப்பெற்றது. தீ - பால்பகா அஃறிணைப் பெயர். நோக்கிக் கண்டனன் - உற்றுப் பார்த்தான். ஆழ்வார் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்பர். (திவ்ய திருவாய் 5. 5-2). சில பிரதிகளில் பின் இரண்டடி முன்னே இருப்பதாகக் கூறப்பெறுகிறது. அதுவே சரி என்று தெரிகிறது. தோள் - கை. “எண்டோள் வீசி நின்று ஆடும்பிரான்” என்று சான்றோர் பிரயோகம் காண்க (அப்பர் தேவாரம்) மேலே பதினொரு பாடலால் பேசப்பட்ட இராவணனைக் கண்டனன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw him; and at the sight, before the thought had even formed, the red fire of doom
  2. burst out of his eyes; the worlds below and above were split and shattered;
  3. he stood shrunk smaller even than the dwarf form taken by Māyōṉ,
  4. gazing until the ten strong heads and twenty arms were plain to see.

What the poem says

This verse completes the long description of the sleeping Irāvaṇaṉ over the previous eleven verses: this is what Aṉumaṉ saw. He has made himself smaller than Viṣṇu in his dwarf incarnation, and he stares until he can clearly count the ten heads and twenty arms.

The instant he sees him, even before he consciously thinks 'this is Irāvaṇaṉ', a fire like the one that ends the world at the close of an age flashes from his eyes. It seems to split the earth below and the heavens above.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ, kāṇṭalōṭum, karuttiṉ muṉ kālac centī
viṇṭaṉa kaṇkaḷ, kīṇṭu veṭittaṉa kīḻum mēlum,
koṇṭatu ōr uruvam māyōṉ kuṟaḷiṉum kuṟuki niṉṟāṉ,
tiṇ talai pattum tōḷkaḷ irupatum teriya nōkki.