கம்பராமாயணம் 5101 · சுந்தர 3.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(சீற்றங்கொண்ட அனுமன்) வாள் ஆற்று - வாளை ஒத்த; கண்ணாளை - கண்களை உடைய சீதாபிராட்டியை; வஞ்சித்தான் - வஞ்சித்துச் சிறை வைத்த இராவணனின்; மணிமுடி - மணிகள் பதித்த கிரீடத்தை; என் தாள் ஆற்றலால் - என்னுடைய கால் வலிமையால்; இடித்து - தாக்கி; பத்துத் தலையும் - பத்து தலைகளையும்; தகர்த்து - பொடிப் பொடியாக்கி; இன்று - இன்றைய தினத்தில்; என் - என்னுடைய; ஆள் ஆற்றல் - அடிமையின் வலிமையை; காட்டேனேல் - காட்டாமற் போனால்; தோள் ஆற்றல் - (என்னுடைய) தோளின் வலிமை; என்னாகும் - என்ன பயனுடையதாகும்; மேல் - இனிமேல்; நிற்கும் - நிலை பெற்றிருக்கும்; சொல் - புகழானது; என்னாம் - என்ன சிறப்பை அடையும் (அன்றி); அடியேனாய் - (யான்) தொண்டு புரிபவனாக; முடியேன் - கருதப்படமாட்டேன்.
ஆற்றுதல் - ஒத்தல். “வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” என்னும் தமிழ் மறைக்கு (குறள் - 101) வரைந்த அழகரின் உரையைக் காண்க.
தோள் ஆற்றல், மேல் நிற்கும் சொல் என்பனவற்றை இராவணனுக்கு ஆக்கி, அவை என்முன் என்னாகும் என்று அனுமன் தன் வீரத்தை நினைத்துக் கூறியதாகவும் கொள்ளலாம். முடியேன் - கருதப்படமாட்டேன். முடிதல் - கருதுதல். அவன் முடிவு யாதோ என்னும் உலக வழக்கு இப்பொருளைக் காட்டும். நான்கு சீர்களும் காய்ச்சீர் பெற்றும், இத்தகு பாடல்கள் இந்நூலில் 120 காணப்படுகின்றன (மணிமலர் 70)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What is the strength of my shoulders worth? What of the fame that would stand hereafter?
- If I do not smash the jewelled crowns of him who deceived the lady with sword-like eyes
- with the strength of my feet, shatter all ten heads, and show today
- the strength of a servant, I shall not be counted a servant at all!'
What the poem says
The metre changes once more as Aṉumaṉ's fury bursts out. Facing the demon who tricked and carried off Cītai, he asks what use his strength and his fame are if he does not act now.
He vows to stamp on Irāvaṇaṉ's jeweled crowns, crush all ten heads this very day and show what a true servant of Irāmaṉ can do. Otherwise, he says, he does not deserve to be called a servant. The next verses show him stopping himself.