கம்பராமாயணம் 5108 · சுந்தர 3.226
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராவணன்) கற்பு அழியா - கற்பு நிலையிலிருந்து பிறழாத; குலமகளை - தூய பிராட்டியை; கொன்றானோ - கொன்றுவிட்டானோ; கொடுந்தொழிலால் - (புலால் உண்ணும்) கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ; எப்புறத்தே - எந்த உலகத்தில்; செறித்தானோ - சிறையில் அடைத்து வைத்தானோ; சிறியேன் - அற்ப அறிவுடைய யான்; ஒன்றானும் - ஒரு சிறிதும்; உணரகிலேன் - அறியாதவனாய் உள்ளேன்; இனி - இனிமேல்; மீண்டும் போய் - திரும்பிச் சென்று (இராமபிரானுக்கு); என் உரைக்கேன் - யாது கூறுவேன்; இக் கொடுந்துயரம் - (பிராட்டியைக் காணாத) இப்பெருந்துன்பம்; பொன்றாத பொழுது - செத்தால் அன்றி; எனக்கு - (மானமுடைய) எனக்கு; போகாது - நீங்காது.
இறந்தால் துன்பம் நீங்கும் என்பது கருத்து. ஆல் - அசை. ஒன்றானும் - சிறிதும். ஒன்று ஆயினும் என்பது ஒன்றானும் என வந்தது. ஒன்று - சிறிது. ஓம்படை ஒன்றும் சொல்லாள் (சிந்தா - 232) இனியர் பரிகாரம் சிறிதும் கூறாளாய், என எழுதினார். ஆனும் என்பது ஆயினும் என்பதன் திரிபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Has he killed her, the noble lady whose chastity never fails? In his cruel ways
- has he eaten her? In what region has he shut her away in prison? I, a small mind,
- can make out nothing at all; going back now, what shall I say?
- Unless I die, this cruel sorrow will not leave me.'
What the poem says
Aṉumaṉ despairs. Perhaps Irāvaṇaṉ has killed the faithful Cītai, or, being a flesh-eating demon, has even eaten her. Or perhaps he has hidden her away in some other world.
Aṉumaṉ calls himself small-minded for not being able to work it out. He cannot imagine going back to Irāmaṉ with no news, and he feels that only death could end his grief.