கம்பராமாயணம் 5109 · சுந்தர 3.227

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

காகுத்தன் - (காகுத்தன் மரபில் தோன்றிய) இராமபிரான்; கண்டுவரும் - (அனுமன்) சீதையைப் பார்த்து வருவான்; என்று இருக்கும் - என்று எண்ணியிருப்பான்; கவிக்குலக்கோன் - குரங்குகளின் தலைவன் (சுக்கிரீவன்); கொண்டுவரும் - (அனுமன்) சீதையைக் கொண்டு வருவான்; என்று இருக்கும் - என்று எண்ணியிருப்பான்; யான் - அற்பனாகிய யான்; இழைத்த - நிறைவேற்றிய; கோள் இது - இலட்சியமோ இப்படியுள்ளது; புண்டரிக நயனத்தான்பால் - தாமரைக் கண்ணன் (இராமன்) பால்; இனி - இனிமேல்; யான் போவேனோ - யான் செல்வேனோ; விண்டவரோடு - பகைத்தவர்களுடன்; உடன் வீயாது - ஒருங்கே சாகாமல்; யான் வாளா - யான் பயனின்றி; விளிவேனோ - இறப்பேனோ.

விண்டவர் என்பதற்கு, அங்கதன் முதலானவர்கள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்கதன் முதலானவர்கள் இறவாமையால் அவ்வுரை வெவ்வுரை. போரில் இறப்பாரை வீரர் விரும்புவர் என்க - மந்திரப்படலம் தசரதன் மொழிகளைப் பார்க்கவும். ‘இந்தச் சத்துருவான அரக்கரைக் கொல்லாமல் வெறுமே சாகேன்’ என்பது பழையவுரை (அடை - பதி).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Kākuttaṉ will be waiting, thinking, "He will see her and come back!"; the king of the monkey race
  2. will be waiting, thinking, "He will bring her back!"; and this is the deed I have done!
  3. Shall I now go back to the one with lotus eyes?
  4. Shall I die for nothing, without dying together with my foes?'

What the poem says

Aṉumaṉ thinks of those waiting for him. Irāmaṉ expects him at least to see Cītai and return. Cukkirīvaṉ, king of the monkeys, even expects him to bring her back. And this failure is all he has achieved.

How can he face lotus-eyed Irāmaṉ now? Yet he will not simply die uselessly either. If he must die, he will die fighting and take his enemies, the demons, with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṭu varum! eṉṟu irukkum kākuttaṉ; kavikkulakkōṉ
koṇṭu varum! eṉṟirukkum; yāṉ iḻaitta kōḷ ituvāl
puṇṭarika nayaṉattāṉ pāl iṉi yāṉ pōvēṉō?
viṇṭavarōṭu uṭaṉ vīyātu, yāṉ vāḷā viḷivēṉō? '