கம்பராமாயணம் 5111 · சுந்தர 3.229

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்த இவ் இலங்கை
வாழும் மா மன்னுயிர் யான் காணாத மற்று இல்லை :
ஊழியான் பெருந் தேவி ஒருவரையும் யான் காணேன்!
ஆழி தாய், இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ? '

பொருள் · Meaning in Tamil

ஏழுநூறு ஓசனை - எழுநூறு யோசனை அளவுக்கு; எயில் சூழ்ந்து - மதிலால் சூழப்பெற்று; கிடந்தது - பரவியிருப்பதாகிய; இவ் இலங்கை - இந்த இலங்கை மாநகரில்; வாழும் - வாழ்கின்ற; மா மன்னுயிர் - சிறந்த நிலைபெற்ற பிராணிகளுள்; யான் காணாத - யான் பார்த்திராதவை; இல்லை - கிடையாது; ஊழியான் - ஊழிகளின் தலைவனான இராமபிரானின்; பெருந்தேவி - பெருந்தேவியாகிய; ஒருத்தியுமே - ஒப்பற்றவள் மட்டுமே; யான் காணேன் - நான் பார்க்கவில்லை; ஆழிதாய் - (நீர்க்) கடலைக் கடந்து; இடர் ஆழியிடையே - துன்பமாகிய கடலில்; வீழ்ந்து - அழுந்தி; அழிவேனோ - இறப்பேனோ.

ஓசனை - நான்குகாதம். “ஓசனை கமழும்” என்னும் சிந்தாமணித் தொடர்க்கு ‘நான்கு காதம் எல்லை நாறும்” என்று இனியர் உரை வகுத்தார். மற்று - அசை.

உயிர் என்றது பிராணிகளை - உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன் (வனம்புகு - 22).

பெருந்தேவி - பட்டத்தரசி. உடன் முடிகவித்த இயற்பெருந்தேவி (பெருங்கதை 2.4.24).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This Ilaṅkai lies ringed by a wall seven hundred yojanas round;
  2. there is no great living creature dwelling in it that I have not seen;
  3. only the great queen of the Lord of the ages, she alone, I have not seen!
  4. Having crossed the sea, shall I sink into a sea of sorrow and perish?'

What the poem says

Aṉumaṉ goes on lamenting. Ilaṅkai is enclosed by a wall seven hundred yojanas around, and he has seen every living creature in it, except the one he came for, the queen of Irāmaṉ, Lord of the ages.

The verse ends with a bitter play on words. He leapt across the ocean, and now he will drown in an ocean of grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēḻunūṟu ōcaṉai cūḻntu eyil kiṭantatu iv ilaṅkai
vāḻum mā maṉṉuyir yāṉ kāṇāta maṟṟu illai:
ūḻiyāṉ perun tēvi oruttiyumē yāṉ kāṇēṉ!
āḻi tāy, iṭar āḻiyiṭaiyē vīḻntu aḻivēṉō? '