கம்பராமாயணம் 5113 · சுந்தர 3.231

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வானவரே முதலோரை வினவுவனேல், வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்!
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ் வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்! '

பொருள் · Meaning in Tamil

ஊன் அழிய - ஊனால் ஆகிய இவ்வுடம்பு தளர்ச்சியடைய; நீங்காத - இவ்வுடலை விட்டு விலகிப் போகாத; உயிர் சுமந்த - உயிரைத் தாங்கிக் கொண்டுள்ள; உணர்வில்லேன் - அறிவற்ற யான்; வானவரே முதலோரை - தேவர் முதலாகியவரை; வினவுவெனேல் - (பிராட்டியைப் பற்றி) கேட்டால்; வல் அரக்கன் தான் ஒருவன் உளன் ஆக - வலிய இராவணனாய ஒருவன் இருக்க; உரை செய்யும் - பிராட்டியைப் பற்றி எடுத்துக்கூறும்; தருக்கு இலர் - வலிமை அற்றவர்; ஏனையவர்கள் - (அத் தேவரினும் தாழ்ந்த) பிற மக்கள்; எங்கு உரைப்பார் - எப்படிக் கூறுவார்கள்; எவ்வண்ணம் தெரிகேன் - எப்படிப் பிராட்டியிருக்குமிடத்தை ஆராய்வேன்.

தருக்கு - வலிமை. அரக்கர் - சிதைவு எய்தித் தருக்கு அழிவுற (அகத்தியப் 54) தருக்கிலரால் - ஆல் - அசை. தேவர்களின் ஆற்றலின்மையை முனிவர்கள் வாக்கால் உணரலாம் (கம்ப. 2645) பிரம்மதேவனும் ஆற்றல் அற்றவன் என்பதை “கமலத்தானே முதலினர் தலைபத்து உள்ளாற்கு ஆட் செய்கின்றார்கள்” என்னும் சடாயு மொழிகளால் (கம்ப. 3524) அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If I ask the gods and those above them, while this one mighty demon
  2. lives, they have not the boldness to speak!
  3. How then would the others tell me? In what way can I find out?
  4. I, without sense, carrying a life that will not leave even as my flesh wastes away!'

What the poem says

Aṉumaṉ thinks of asking someone where Cītai is, but who could he ask? Even the gods are too afraid of Irāvaṇaṉ to say a word while he lives. Elsewhere the epic shows even Piramaṉ, the creator, serving the ten-headed king.

If the gods dare not speak, lesser beings certainly will not. Aṉumaṉ calls himself senseless for still clinging to life while his body wastes away with grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vāṉavarē mutalōrai viṉavuveṉēl, val arakkaṉ
tāṉ oruvaṉ uḷaṉ āka, uraiceyyum tarukku ilarāl!
ēṉaiyarkaḷ eṅku uraippār? ev vaṇṇam terikēṉō?
ūṉ aḻiya nīṅkāta uyir cumanta uṇarvillēṉ! '