கம்பராமாயணம் 5114 · சுந்தர 3.232

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, 'இலங்கையில் அத்
திருவைக் கண்டனென் 'என்றான் : அவன் உரையும் சிதைந்ததால்
கருவைக்கும் நெடுநகரைக் கடல் இடையே கரையாதே
உருவைக் கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்வேனோ?

பொருள் · Meaning in Tamil

எருவைக்கு - கழுகின் இனங்களுக்கு; முதலாய - தலைவனான; சம்பாதி - சம்பாதியானவன்; இலங்கையில் - இலங்கை மாநகரில்; அத்திருவை - அந்த பிராட்டியை; கண்டனென் - பார்த்தேன்; என்றான் - என்று கூறினான்; அவன் உரையும் - அவன் கூறிய மொழியும்; சிதைந்தது - பொய்யாகி விட்டது; கருவைக்கும் - (இரத்தினம் முதலானவற்றை) கருப்பமாக வைக்கப் பெற்ற; நெடுநகரை - பெரிய இலங்கையை; கடலிடை - கடலிலே; கரையாதே - கரைக்காமல்; இன்னமும் - இன்னும்; உருவைக் கொண்டு - (பயன்படாத) உடம்பைக் கொண்டு; உளென் ஆகி - உயிருடன் இருப்பவனாய்; உழல்கேனோ - வருந்துவேனோ. எருவை - கழுகு. உரைசிதைதல் ஆவது பொய்யாதல். கரு என்பது ஒரு நகரையோ, கோயிலையோ அமைக்குமுன் பூமியின் அடியில் புதைக்கப்படும் இரத்தினம் பொன் முதலானவை. இவ்வாறு கரு அமைந்ததை சிறுபாணாற்றுப்படை பேசும். கருவொடு பெயரிய நன்மா இலங்கை (சிறுபாண் 119-120) இனியர் ‘கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அழித்தற்கரிய மா இலங்கை’ என்றார். இம்மாவிலங்கை என்பது திண்டிவனம் அருகில் உள்ள சிற்றூர். அவ்வுரையின் அடிப்பகுதியில், தமிழ்த்தெய்வம் (உ.வே.சா.) கருவைக்கும் நெடுநகரம் என்ற பகுதியை மேற்கோள் காட்டியதைப் பார்க்கவும். கர்ப்பநியாசம் என்னும் கோவில் வழக்கை நினைக்கவும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Campāti, chief of the vultures, said, "In Ilaṅkai I saw
  2. that lady of fortune"; even his word has proved false!
  3. Without dissolving into the sea this great city with its buried foundation-treasure,
  4. shall I still wander on, keeping this body and staying alive?'

What the poem says

Aṉumaṉ remembers Campāti, the old king of the vultures and brother of Caṭāyu, who told the monkeys he could see Cītai in Ilaṅkai. Now even that word seems to have been false.

He asks himself whether he should go on living without at least dissolving this great city into the sea. The city is said to have treasure placed in its foundations, following the old custom of burying gems and gold beneath a new city or temple when it is founded.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eruvaikku mutalāya campāti, 'ilaṅkaiyil at
tiruvaik kaṇṭaṉeṉ 'eṉṟāṉ: avaṉ uraiyum citaintatāl
karuvaikkum neṭunakaraik kaṭaliṭaiyē karaiyātē
uruvaik koṇṭu iṉṉamum nāṉ uḷeṉ āka uḻalkēṉō?