கம்பராமாயணம் 5115 · சுந்தர 3.233
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்) வடித்து - சீவப்பெற்று; ஆய் பூ - ஆராய்ந்தெடுக்கப்பெற்ற பூக்கள் அணியப்பெற்ற; குழலாளை - கூந்தலையுடைய பிராட்டியை; இ அடல் அரக்கன் - இந்த வலிமை மிக்க இராவணன்; வான் அறிய - விண்ணுலகம் அறியவும்; மண் அறிய - மண்ணுலகம் அறியவும்; பிடித்தான் - கவர்ந்தான்; எனும் மாற்றம் - என்று பேசப்படும் மொழி; பிழையாது - தவறாது (நாண்); ஆழி இலங்கையினை - கடல் நடுவுள்ள இலங்கை மாநகரை; எடுத்து - பெயர்த்தெடுத்து; இருங்கடல் இட்டு - பெரிய கடலினுள் போகட்டு; இவனை - இந்த இராவணனை; முடித்தால் - அழித்தால் (பிறகு); யான் - நான்; முடிதல் - அழிதல்; மன்ற முறை - உறுதியாக நியாயம் ஆகும்; என்று உணர்வான் - என்று நினைப்பவன் ஆனான்.
வடித்து - சீவப்பெற்று. மஞ்சு ஒக்கும் அளகஓதி மழை ஒக்கும் வடித்த கூந்தல் என்று சூர்ப்பணகை பேசினாள்.
பிழையாதால் - ஆல் - அசை. முடித்தாலே - ஏ அசை. ஆழி - வட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'That this mighty demon seized the lady with combed, flower-chosen tresses,
- with heaven knowing it and earth knowing it, is a word that cannot be false;
- if today I lift up circular Ilaṅkai, cast it into the vast sea
- and finish him, then my own death will surely be right!' So he resolved.
What the poem says
Aṉumaṉ's thoughts settle on a final plan. Everyone in heaven and on earth knows that Irāvaṇaṉ carried Cītai off, so that much is certain even if he cannot find her.
If he cannot find her, he will at least uproot the whole round island of Ilaṅkai, hurl it into the sea and kill Irāvaṇaṉ. After that, his own death would be fitting. His despair has turned into a fierce resolve.