கம்பராமாயணம் 5116 · சுந்தர 3.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தன் உள் உறையும் - தன்னுடைய இதயத்தில் வாழும்; ஒருவனைப் போல் - இராமபிரானைப்போல்; எள் உறையும் - எள் தங்கும் சிற்றிடமும்; ஒழியாமல் - விடாமல்; யாண்டையுளும் - எவ்விடத்திலும்; உளனாய் - இருப்பவனாய்; எம்மருங்கும் உலாவுவான் - எவ்விடத்தும் சஞ்சரிக்கும் அனுமன்; புள் உறையும் - பறவைகள் தங்கியுறையும்; மானத்தை - ஆகாயத்தை; உற நோக்கி - உற்றுப்பார்த்து; அயல் போவான் - அரண்மனையை (விட்டு) வெளியே செல்பவன்; கள் உறையும் மலர் - தேன் பொழிந்த மலர்கள் உடைய; சோலை ஒன்று - ஒரு சோலையை; அயல் - பக்கத்தில்; கண்ணுற்றான் - கண்டான்.
ஒருவனைப்போல் என்னும் பாடத்தினும் அழகனைப்போல் என்னும் பாடம் சிறக்கும். “கரியனாய், வெளியன் ஆகிச் செய்யனாய்க் காட்டும்... தன் அகத்துறை அழகனே போல்” என்னும் ஊர்தேடு படலம் (கம்ப. 4936).
இராமபிரானைப்போன்றவன் அனுமன் என்று பேசப்படுவது இந்திய தத்துவ இயல்பைக் காட்டும். ஊர் - நிறைவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaving out not even a space where a sesame seed could lie, present everywhere,
- like the One who dwells within him, he roamed on every side;
- gazing intently at the sky where birds dwell, he went out beyond,
- and nearby he caught sight of a grove of flowers brimming with honey.
What the poem says
Aṉumaṉ has searched every space in the city, leaving out not even room enough for a sesame seed. In this he is like Irāmaṉ, the god who lives in his heart and fills all things.
Gazing up at the open sky, he goes out beyond the palace and spots a grove full of honey-laden flowers nearby. This is the Asoka grove where Cītai is held, and the chapter of the search through the city ends here.