கம்பராமாயணம் 5118 · சுந்தர 4.2

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று, சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்,
அன்று வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம்.

பொருள் · Meaning in Tamil

என்று - என்று சிந்தித்து; இராகவன் தூதன் - இராமபிரானின் தூதனான அனுமன்; சோலை புக்கு எய்தினன் - சோலைக்குள் சென்று சேர்ந்தான்; (அப்போது) வானவர் - தேவலோகத்திருப்பவர்; ஒன்றி பூ மழை பொழிந்தனர் - ஒன்று சேர்ந்து பூமாரி பொழிந்து; உவந்தார் - மகிழ்ச்சி அடைந்தனர்; இனி - இனிமேல்; வாள் அரக்கன் - வாள் ஏந்திய இராவணனால்; அவ்வழி சிறைவைத்த - அச் சோலையில் சிறை வைக்கப்பெற்ற; அல் துன்று ஓதிதன் - இருள் போன்ற கூந்தலையுடைய பிராட்டியின்; அன்று நிலை - அப்போதைய நிலைமையை; சொல்லுவான் துணிந்தாம் - சொல்லுவதற்குத் துணிந்தோம்.

அல்துன்று ஓதி - இருள் போன்ற கூந்தல். துன்று - உவமச் சொல். (சிந்தாமணி. 2490 நச்) உவமச் சொல்லாவது வினைச் சொற்களை உவம உருபு போலப் பயன்படுத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, Irākavaṉ's messenger went into the grove and reached it;
  2. the gods, all together, rained down flowers and rejoiced.
  3. Now we have resolved to tell the state, at that time, of the lady with hair dense as night
  4. whom that sword-bearing demon had kept prisoner in that place.

What the poem says

With these thoughts, Irāmaṉ's messenger enters the grove. The gods, knowing that the moment has come, shower flowers from the sky in joy.

The poet steps forward in his own voice. Before telling what Aṉumaṉ sees, he will describe the state of Cītai, whose hair is dark as night, kept prisoner in this grove by Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu, cōlaipukku eytiṉaṉ irākavaṉ tūtaṉ;
oṉṟi vāṉavar pūmaḻai poḻintaṉar uvantār,
aṉṟu av vāḷ arakkaṉ ciṟai av vaḻi vaitta
tuṉṟu al ōtitaṉ nilai iṉic colluvāṉ tuṇintām.