கம்பராமாயணம் 5133 · சுந்தர 4.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெற்ற தாயரும் - தன்னைப்பெற்றெடுத்த தாயார்களும்; தம்பியும் - தம்பியாகிய பரதனும்; பெயர்த்தும் வந்து எய்தி - மறுபடியும் காட்டுக்கு வந்து இராமபிரானை அடைந்து; கொற்ற மாநகர் - வெற்றி யுடைய அயோத்திக்கு; கொண்டு எழுந்தார்களோ - (இராமபிரானை) அழைத்துக்கொண்டு போய்விட்டார்களோ; (இராமபிரான்) குறித்து - குறிப்பிட்டு; சொற்ற ஆண்டு எலாம் - (கைகேயி) கூறிய பதினான்கு வருடமும்; உறைந்து அன்றி - காட்டிலே தங்கித் திரும்புவானே தவிர; அந் நகர் துன்னான் - (உரிய காலத்துக்கு முன்) அந்த அயோத்தியை யடையான்; உற்றது உண்டு எனா - இராமபிரானுக்கு நேர்ந்த துன்பம் பெரியது என்று; (பிராட்டி) படர் உழந்து - துன்பத்தால் மனம் சிதைந்து; உறாதன உறுவாள் - எவரும் அடையாத துன்பத்தால் வருந்துவாள். உண்டு - பெரியது. “உண்டு இடுக்கண் ஒன்று உடையான்” என்பது (கம்ப. 2333.) கம்பர் வாக்கு. அங்கு பெரிது என்றும் பொருள் கொள்க. பாடலின் சிக்கல் தீரும். உண்டெனத் தருக நாட்டு வழக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Have the mothers who bore him and his younger brother come back again
- and taken him off to the great victorious city? No: he will not set foot in that city
- without living out all the years that were named and spoken.
- Something great has befallen him!' So, sunk in sorrow, she suffers what none has suffered.
What the poem says
Cītai wonders whether Irāmaṉ's mothers and his brother Paratan came to the forest again and took him back to Ayōttī. But she dismisses the idea at once. Irāmaṉ would never return before he had lived out all fourteen years of exile that he promised.
So she concludes that something terrible must have happened to him, and this fear brings her a grief no one else has known.