கம்பராமாயணம் 5134 · சுந்தர 4.18

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பில வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்? ' எனப் பொருமாக்
கரன் நெரித்து, அது கண்டனளாம் எனக் கவல்வாள்.

பொருள் · Meaning in Tamil

முரன் எனத்தகும் - முரன் என்று கூறத்தகுந்த; மொய்ம்பினோர் - வலிமை உடையவர்களாய்; முன் - ஆதி காலத்தில்; பொருதவர்போல் - (திருமாலுடன்) போர் செய்தவர்களைப் போல; வரம்பில - எல்லையற்ற; வரனும் - வரங்கள் பெறுவதிலும்; மாயமும் - மாயங்கள் புரிவதிலும்; வஞ்சமும் - வஞ்சகங்கள் செய்வதிலும்; வல்லோர் - ஆற்றல் பெற்றவர்கள்; பொர - தாக்குதலாலே; நிகழ்ந்தது ஓர் பூசல் - உண்டான ஒப்பற்ற போர்; உண்டு ஆம் என - பெரிதாய் இருக்குமென்று கூறி; பொருமா - மனம் கலங்கி; கரன் எதிர்ந்தது - கரன் போர்க்களத்தில் போர் புரிவதை; கண்டனள் ஆம் என - நேரே கண்டாற் போல; கவல்வாள் - வருந்துவாள்.

கரன் போரைப் பிராட்டி பார்த்ததில்லை. இப்போது அது கண்களுக்குத் தெரிகிறது. அது கண்டனள் - ‘அவர் பொர வந்ததும் பெருமான் கூடப் பொருகிறதும் வானவெளித் தோற்றமாகக் கண்முன்னே அந்தப் போர் கண்டவள்’ - என்பது பாடியுரை (அடை பதி) கரன் நெரித்து அது கண்டனள் ஆம் எனக் கலுழ்வாள் என்று பாடம் கொண்டு கைகளை நெரித்துக் கொண்டு அப்போரை நேரில் முன் பார்த்தது போல இப்பொழுதும் பாவித்து என்று பொருள் கூறலும் ஆம் (அடை - பதி) பொர - தாக்க. பொருபுனல் (சிறுபாண் - 118) “போர் செய்ய” என்றும் கூறலாம். உண்டு - மிகுதி என்னும் பொருள் தந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Like those of Muraṉ's strength who fought him in days of old,
  2. demons boundlessly skilled in boons, magic and treachery
  3. must have attacked, and some great battle has taken place!' So, choking,
  4. she grieves as if she had seen Karaṉ meeting him in battle.

What the poem says

Cītai imagines that demons, as mighty as Muraṉ and the other demons who fought Viṣṇu long ago, and full of boons, sorcery and deceit, have attacked Irāmaṉ in a great battle.

She pictures it so vividly that it is as if she were watching his earlier fight with Karaṉ, the demon general he destroyed in the forest of Daṇḍaka. In fact she never saw that battle, but now it appears before her eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muraṉ eṉattakum moympiṉōr muṉ porutavarpōl,
varaṉum, māyamum, vañcamum, varampu ila vallōr
pora nikaḻntatu ōr pūcal uṇṭām? ' eṉap porumāk
karaṉ etirntatu kaṇṭaṉaḷ ām eṉak kavalvāḷ.