கம்பராமாயணம் 5135 · சுந்தர 4.19

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெம்மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியதாம் என
மும்மடங்கு பொலிந்த முகத்தின் அவ்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.

பொருள் · Meaning in Tamil

கேகயர்தம் மடந்தை - கேகய அரசனின் மகளான கைகேசி; தெவ் மடங்கிய - பகைவர்கள் புற முதுகு காட்டி ஓடும்படி (வீரம் பெற்ற); சேண்நிலம் - பரந்த கோசல நாடு; உன் தம்பியது ஆம் என - உன் தம்பியான பரதனுக்கே உரியது என்று கூற; மும்மடங்கு பொலிந்த முகத்தினன் - (இயல்பான நிலையினும்) மூன்று மடங்கு பொலிவாக விளங்கிய முகத்தைப் பெற்ற; வெம் மடங்கலை - யாவரும் விரும்பும் சிங்கம் போலும் இராமபிரானை; உன்னி - நினைந்து; வெதும்புவாள் - (துன்பத்தால்) வெப்பம் அடைவாள்.

மும்மடங்கு பொலிந்தன (யுத்த) என்னும் பகுதியைக் கருதுக. இக்கலிவிருத்தம் மா - விளம் - விளம் - விளம் என்னும் 4 சீர்களைப் பெற்று வரும். இதனை “அளவியற் சந்தம்” என்று கம்பன் அடிப்பொடி அவர்கள் குறிக்கிறார்கள். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 1198 உள்ளன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the daughter of the Kēkayas said, 'The wide land where foes are humbled
  2. belongs to your younger brother,'
  3. his face shone three times brighter than before:
  4. thinking of that fierce lion, she burns.

What the poem says

In a new metre, Cītai begins to remember the past. She recalls the day Kaikēyi, princess of the Kēkaya people, told Irāmaṉ that the kingdom of Kōcalam would go to his younger brother Paratan instead of him.

Irāmaṉ's face did not fall. It shone three times brighter, because he was glad to obey his father. Thinking of this lion among men, so noble in giving up his throne, she burns with longing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tev maṭaṅkiya cēṇ nilam kēkayar
tam maṭantai uṉ tampiyatu ām eṉa
mummaṭaṅku polinta mukattiṉaṉ
vem maṭaṅkalai uṉṉi vetumpuvāḷ.