கம்பராமாயணம் 5138 · சுந்தர 4.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம்பரவேந்தற்கு - விண்ணுலக அரசனாகிய இந்திரனுக்கும்; இன்னல் இயற்றிய - துன்பத்தைச் செய்த; பல் நலம் - பலவிதமான சிறப்பைப் பெற்ற; பதினாலாயிரம் படை - பதினாலாயிரம் படை வீரர்கள்; கன்னல் மூன்றில் - மூன்று நாழிகைக்குள்ளே; களப்பட - போர்க்களத்திலே அழிய; கால் வளை வில் நலம் - இரு முனையை வளைத்த வில்லின் சிறப்பை; புகழ்ந்து - கொண்டாடி; ஏங்கி வெதும்புவாள் - ஏக்கமுற்று வெம்மையடைவாள்.
படை என்றது சேனாவீரர்களை. காலாட்படை என்னும் வழக்கை நோக்குக. இராமபிரான் பதினாலாயிரம் படையை மூன்று நாழிகையில் அழித்ததை “வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில்” என்னும் சூர்ப்பனகை மொழியை உன்னுக (கம்ப. 3130)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The army of fourteen thousand, excellent in many ways,
- that had brought grief even to the king of the sky,
- fell on the battlefield within three nāḻikai: praising the excellence of the bow
- with its ends bent back, she pines and burns.
What the poem says
Cītai remembers Irāmaṉ's battle in the forest against Karaṉ's army of fourteen thousand demons, warriors who had troubled even Intiraṉ, king of the gods.
Irāmaṉ destroyed them all in just three nāḻikai, about an hour and twelve minutes, with his single bow. Cūrppaṇakai herself later described the slaughter to Irāvaṇaṉ. Remembering how mighty his bow is, Cītai longs for him all the more.