கம்பராமாயணம் 5142 · சுந்தர 4.26

Section சுந்தர காண்டம் / 4. காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள்.

பொருள் · Meaning in Tamil

பரித்த - தன்குலத்தவரால் சுமத்தப் பெற்ற; செல்வம் - அரச செல்வம்; ஒழிய - பரதன்பால் தங்க; படரும் நாள் - காட்டுக்குச் சென்ற காலத்தில்; அருத்தி வேதியற்கு - ஆசைமிக்க திரிசடன் என்னும் அந்தணனுக்கு; ஆன்குலம் ஈந்து - பசுக் கூட்டங்களை வழங்கியும்; அவன் - அந்த அந்தணனின்; கருத்தின் ஆசை - உள்ளத்தில் உள்ள ஆசைக் கடலுக்கு; கரை இன்மை கண்டு - கரை இல்லாமல் இருப்பதைப் பார்த்து; இறை - சிறிதே; சிரித்த செய்கை - சிரித்த இராமபிரானின் செயலை; நினைந்து - எண்ணி; அழும் செய்கையாள் - ;

நாடு துறந்து காடு போம்காலத்தில் திரிசடனுக்குப் பசுக்கூட்டங்கள் வழங்கியும் அவன் ஆசை எல்லையற்றுப் போவதைக் கண்டு சிரித்த இராமபிரானின் செயலை நினைந்து வருந்தினாள். ஒழிய - தங்கல் 'தோழன் நீ எனக்கு இங்கு ஒழி' என்னும் பெரிய திருமொழி. ஒழிய - தன்னைவிட்டு நீங்க என்றும் பொருள் கூறலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the day he set out, leaving behind the wealth he had borne,
  2. he gave herds of cattle to a covetous brahmin, and seeing
  3. that the craving in that man's heart had no shore, he
  4. smiled a little; remembering that deed, she weeps.

What the poem says

Cītai recalls the day Irāmaṉ left Ayōttī for the forest, giving away his wealth. A greedy brahmin named Tiricaṭaṉ received herds of cows, yet his appetite seemed endless, and Irāmaṉ smiled gently at it.

The tender, playful memory of her husband's generosity and good humour brings her to tears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paritta celvam oḻiyap paṭarum nāḷ
arutti vētiyaṟku āṉkulam īntu avaṉ
karuttiṉ ācaik karai iṉmai kaṇṭu iṟai
ciritta ceykai niṉaintu aḻum ceykaiyāḷ.